கோயில்கள்

இன்றைய ராசி பலன்கள் 10.08.2016

மேஷம் பணம் சம்பாதிக்கும் திறன் அதிகரிக்கும். வியாபாரிகள் புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளரைக் கவர்வர். வாக்கு வன்மையால் வளம் பெர...


மேஷம்

பணம் சம்பாதிக்கும் திறன் அதிகரிக்கும். வியாபாரிகள் புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளரைக் கவர்வர். வாக்கு வன்மையால் வளம் பெருகும். பயணங்கள் பயன் தரும்.
ரிஷபம்
எல்லா நலன்களும் உண்டாகும். பயண சுகம் ஏற்படும். தனவரவு கூடும். நண்பர்களால் உதவிகள் ஏற்படும். பெயரும், புகழும் உண்டாகும். தனக்கென சொந்தவீடும் ஏற்படும்.
மிதுனம்
குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள். பயணத்தின் போது தடைகள் அல்லது விபத்துக்களைச் சந்திக்க நேரலாம். எச்சரிக்கை தேவை. பொருட்களைக் கவனமாகப் பாதுகாக்கவும்.
கன்னி
குடும்ப உறுப்பினர் இடையே ஓற்றுமை ஓங்க வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். உடற் சோர்வு ஏற்படும்.
மகரம்
தைரியம் ஓங்கும். ஆர்வமுடன் செயல்பட்டால் காரியங்கள் அனுகூலமாய் முடியும். திருப்திகரமான தீர்த்த யாத்திரைகள் மகிழ்வு தரும். இந்திர போகம் உண்டாகும்.
கடகம்
அன்னையின் உடல் நிலையில் சிறப்பு கவனம் தேவை. செயல்பாடுகளில் வரக்கூடிய தடை, தாமதங்களைக் கண்டு துவண்டுவிடாமல், தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சியம்.
சிம்மம்
முயற்சிகள் வெற்றிபெறும். தனலாபம் பெருகும். குழந்தைகள் மீது பாசம் பொழிவீர்கள். மனைவியின் ஒத்துழைப்பால் மனம் மகிழும். வெளியூர்ப் பயணங்கள் வெற்றிகரமாக அமையும்.
துலாம்

அரசுப் பணியாளர்கள் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். பாக்கிய விருத்தி ஏற்படும். சாதுர்யமான பேச்சால் அனைவரையும் கவர்ந்திடுவீர்கள். செல்வ நிலை சீராக உயரும்.
மீனம்
நேர்மையாக நடக்கவேண்டிய நாள். கணவன் மனைவியிடையே கருத்துவேறுபாடுகள் எழலாம். அதிகாரிகளிடம் பணிவாக நடந்தால் பணியில் சாதகமான சூழல் உருவாகும்.
தனுசு
பெண்களால் இலாபமும் சந்தோஷமும் பெருகும். பிறருக்கு உதவி செய்யும் நல்ல எண்ணம் கொள்வீர்கள். கல்வியில் மிகுந்த அக்கறை கொண்டு படித்துத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள்.
விருச்சிகம்
சமாளிக்க முடியாத செலவுகளால் பணமுடை ஏற்படும். உறவுகள் மீது தேவையற்ற வெறுப்பு ஏற்படும். சினம் தணிந்தால் சிக்கல்கள் தீரும். பாவையரால் பணவிரயம் ஏற்படும்.
கும்பம்

தெய்வ நம்பிக்கைக் கூடுவதன் காரணமாக புண்ணியக் காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். புத்திர பாக்கியம் ஏற்படும். வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும்.

Related

புதிய செய்திகள் 8263971929044233101

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item