கோயில்கள்

இன்றைய ராசிபலன் 12.08.2016

மேஷம்:  அன்றாட பணிகளை பொறுப்புடன் நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த மந்தநிலை மாறும். லாபம் சீராகும். பணியாளர்கள், பணிச் சு...

மேஷம்: அன்றாட பணிகளை பொறுப்புடன் நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த மந்தநிலை மாறும். லாபம் சீராகும். பணியாளர்கள், பணிச் சுமையில் இருந்து விடுபடுவர். மாணவர்கள் ஆர்வமுடன் படிப்பர்.

ரிஷபம்: எதிர்கால வாழ்வில் நம்பிக்கை அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் உயரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். அரசியல்வா திகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.

மிதுனம்: நண்பரிடம் மனம் விட்டுப் பேசுவீர்கள். குடும்ப பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். வெகுநாள் தேடிய பொருள், புதிய முயற்சியால் கிடைக்கும்.

கடகம்: மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் நிலுவைப் பணிகளை நிறைவேற்றுவது அவசியம். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள், பணிச்சுமைக்கு ஆளாகலாம். உடல்நலனில் அக்கறை தேவை.

சிம்மம்: செயல் நிறைவேற விடாமுயற்சி தேவைப்படும். குடும்பத்தினர் ஆலோசனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். தொழில், வியாபாரத்தில் மிதமான பணவரவு கிடைக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது.

கன்னி: கடந்த கால உழைப்புக்குரிய நற்பலன் கிடைக்கும். உங்களின் திறமை கண்டு மற்றவர் பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் வரும். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர்.

துலாம்: மாறுபட்ட கருத்து உள்ளவர்களிடம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் உருவாகிற குளறுபடியை சரி செய்வீர்கள். மிதமான வருமானம் கிடைக்கும். உறவினர் வருகையால், வீட்டுச் செலவு அதிகரிக்கும்.

விருச்சிகம்: எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும். நண்பர்களுடன் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் அமோக லாபம் கிடைக்கும். மனைவியின் பாசத்தால் மனம் மகிழ்வீர்கள்.

தனுசு: சிரமத்தைப் பிறரிடம் சொல்ல வேண்டாம். தொழில், வியாபாரத்தில், அதிக உழைப்பால் பணி இலக்கு நிறைவேறும். அளவான பணவரவு கிடைக்கும். பெண்கள் ஆடம்பரச் செலவு செய்ய நேரிடலாம்.

மகரம்: சமூகத்தில் உங்களைப் பற்றி மதிப்பீடு உயரும். நண்பரிடம் கேட்ட உதவி எளிதாக கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிப் பணி நிறைவேறும். பெண்கள், வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.

கும்பம்: அனைவரும் உங்கள் மீது நல்லெண்ணத்துடன் பழகுவர். தொழில், வியாபார வளர்ச்சியால், சீரான முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். விருந்து, விழாவில் பங்கேற்று மகிழ்வீர்கள்.

மீனம்: வழக்கத்திற்கு மாறாக பணியில் தொந்தரவு ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் சுமாரான லாபம் கிடைக்கும். பணியாளர்கள் பணியில் விழிப்புடன் இருக்கவும். பெண்கள் நகை, பணம் இரவல் கொடுப்பது கூடாது.


Related

புதிய செய்திகள் 8930092477444249234

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item