கோயில்கள்

இன்றைய-ராசி-பலன்-14-06-2016

மேஷம் குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங்களால் ஆதாயமடைவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெற...

மேஷம்
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங்களால் ஆதாயமடைவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை
ரிஷபம்
குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். நட்புவழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வேற்றுமதத்தவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை
மிதுனம்
நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது வேலைக் கிடைக்கும். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்
கடகம்
உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை
சிம்மம்
குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உடல் நலம் சீராகும். அழகு, இளமைக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்
கன்னி
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்துப் போகும். நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாகப் புரிந்துக் கொள்வார்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் சக ஊழியர்களை குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்
துலாம்
விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். அரசு காரியங்கள் இழுபறியாகும். அநாவசியச் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை

விருச்சிகம்
குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். சபைகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே
தனுசு
நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உறவினர், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பர். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்
மகரம்
கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். நட்பு வட்டம் விரியும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
கும்பம்
சந்திராஷ்டமம் தொடர்வதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். அடுத்தவர்களை குறைக் கூறுவதை நிறுத்துங்கள். உங்கள் திறமையை சிலர் குறைத்து மதிப்பிடுவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கப்பாருங்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்
மீனம்
பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. புதியவர்கள் நண்பர்களாவார்கள். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்


Related

புதிய செய்திகள் 8049438137055065374

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item