கோயில்கள்

இன்றைய ராசிபலன் 16.08.2016

மேஷம்: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றி கொள்வீர்கள். உறவினர், நண்பர்க ளில் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்த...


மேஷம்: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றி கொள்வீர்கள். உறவினர், நண்பர்க ளில் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள்.

வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். சாதிக்கும் நாள்.
ரிஷபம்:  காலை 7.00 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மனஉளைச்சல் ஏற்படும். பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும்.  விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.   
 மிதுனம்: காலை 7.00 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால்  டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.
கடகம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். பிள்ளைகள் உங்கள்பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு.  உத்யோகத்தில் மேலதிகாரி உங்களிடம் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார். நன்மை கிட்டும் நாள்.  
சிம்மம்: வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர்கள், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.  வி£பாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். திடீர் யோகம் கிட்டும் நாள்.
கன்னி: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். புதுமை படைக்கும் நாள்.
துலாம்: நட்பு வட்டம் விரியும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். பயணங்களால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின்  பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். உழைப்பால் உயரும் நாள்.
விருச்சிகம்:  குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை  கையாளுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். சிறப்பான நாள்.  
தனுசு: காலை 7.00 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எதிலும் அவசரப்பட வேண்டாம். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். நீண்ட நாள்  பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். தடைகள் உடைபடும் நாள்.  
மகரம்:  காலை 7.00 மணி முதல் ராசிக்குள் சந்திரன் தொடங்குவதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேன்டியிருக்கும். வேலைச்சுமை மிகுந்த நாள்.
கும்பம்: கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். எதிர்பாராத திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது முதலீடு  செய்யலாம். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வரக்கூடும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.   
மீனம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்தும் தருவார்கள். மதிப்புக் கூடும் நாள்.

Related

புதிய செய்திகள் 4142513188911220499

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item