கோயில்கள்

இன்றைய ராசிபலன் -17.08.2016

மேஷம்: பேச்சைக் குறைத்து செயலில் வேகம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செ...

மேஷம்: பேச்சைக் குறைத்து செயலில் வேகம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டி களை சமாளிப்பீர்கள்.
உத்யோகத்தில் உங்களின் திறமை கள் வெளிப்படும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

ரிஷபம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவடையும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிடைக்கும். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.

மிதுனம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். கடின உழைப்பால் முன்னேறும் நாள்.

கடகம்: மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். பயணங்கள் சிறப்பாக அமையும். மனைவிவழியில் நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.

சிம்மம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் தங்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அமோகமான நாள்.

கன்னி: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்பு தொல்லை குறையும். வியாபாரத்தல் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

துலாம்: பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

விருச்சிகம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அக்கறை காட்டுவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். விவாதங்களில் வெற்றி பெறும் நாள்.

தனுசு:கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். தாழ்வு மனப்பான்மை நீங்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். உற்சாகமான நாள்.
மகரம்

மகரம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்துப் போகும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சகிப்புத் தன்மையால் சங்கடங்கள் தீரும் நாள்.

கும்பம்: எளிதாக முடிய வேண்டிய விஷயங்கள் கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

மீனம்: எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அனுபவ அறிவால் வெற்றி பெறும் நாள்.

Related

புதிய செய்திகள் 1855684030665574122

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item