கோயில்கள்

இன்றைய ராசிபலன் -18.08.2016-

மேஷம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. பிரபலங்கள் உதவுவார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். ...

மேஷம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. பிரபலங்கள் உதவுவார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படு வார்கள்.
உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கி ய  அறிவுரைத் தருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

ரிஷபம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

மிதுனம்: மதியம் 1.15 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் சம்பாதிப்பீர்கள். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மாலையிலிருந்து எதிர்ப்புகள் அடங்கும் நாள்.

கடகம்: குடும்பத்தினருடன் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். சில வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென்று நினைப்பீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். மதியம் 1.15 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.

சிம்மம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தொட்டது துலங்கும் நாள்.

கன்னி: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் தனித்திறமைகளை வளர்ப்பீர்கள். சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்புவழியில் நல்ல செய்தி
கேட்பீர்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.

துலாம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். மகளுக்கு நல்ல வரன் அமையும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். புது வேலை அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.

விருச்சிகம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் செல்வாக்கு உயரும். நினைத்ததை முடிக்கும் நாள்.

தனுசு: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். அழகு, இளமைக் கூடும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

மகரம்: மதியம் 1.15 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் பணிவாகப் பேசி வேலை வாங்குங்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை ஒரளவு குறையும். மாலைப் பொழுதிலிருந்து தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

கும்பம்: குடும்பத்தினருடன் வீண் விவாதம் வந்துப் போகும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். மதியம் 1.15 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.

மீனம்: துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். உங்களை தவறாக நினைத்துக் கொண்டிருந்தவர்களின் மனசு மாறும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சிறப்பான நாள்.

Related

புதிய செய்திகள் 7484334241255811352

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item