கோயில்கள்

இன்றைய ராசிபலன் 21.08.2016

மேஷம்: சில வேலைகளை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். உற வினர், நண்பர்களுடன் மனஸ் தாபம் வந்து நீங்கும். வெளி வட்டாரத்தில் விமர்சனங...


மேஷம்: சில வேலைகளை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். உற வினர், நண்பர்களுடன் மனஸ் தாபம் வந்து நீங்கும். வெளி வட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது.
வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

ரிஷபம்: சாதிக்க வேண்டு மென்ற எண்ணம் வரும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறைக் காட்டுவார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.

மிதுனம்: உணர்ச்சிப் பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமா கப் பேசுவீர்கள், செயல் படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் உதவுவார்கள். சாதிக்கும் நாள்.

கடகம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த குழப்பம் நீங்கி எதிலும் தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உற்சாகமான நாள்.

சிம்மம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்ல கூடிய சில கருத்துக்கள் கூட சீரியசாக வாய்ப்பிருக்கிறது. தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.

கன்னி: உங்களுடைய அறி வாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோ தர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

துலாம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். தொட்ட காரியம் துலங்கும் நாள்.

விருச்சிகம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள் வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறை வேற்றுவீர்கள். உறவினர்களால் ஆதா யம் உண்டு. புது பொருள் சேரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். கனவு நனவாகும் நாள்.

தனுசு: பிரச்னைகளின் ஆணிவேரை கண்டறிவீ ர்கள். தாயாருக்கு மருத் துவச் செலவுகள் வந்துப் போகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

மகரம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். தாய்வழியில் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். வெற்றி பெறும் நாள்.

கும்பம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். நேர்மறை எண்ணம் பிறக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

மீனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். சிலர் உங்களை மட்டம் தட்டிப் பேசினாலும் உணர்ச்சி வசப்படாதீர்கள். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

Related

புதிய செய்திகள் 8491873522812181049

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item