கோயில்கள்

இன்றைய ராசிபலன் 31.08.2016

மேஷம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாயாருடன் வீண் விவாதங்கள் வந்து நீங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் உங்...


மேஷம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாயாருடன் வீண் விவாதங்கள் வந்து நீங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் உங்கள் கொள்கைகளில்மாற்றம்செய்வீர்கள்.உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.
ரிஷபம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. மற்ற
வர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். தைரியம் கூடும் நாள்.

மிதுனம்: கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் நீங்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்களால் ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.   

கடகம்: காலை 11.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தி
யமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். மாலையிலிருந்து நிம்மதி கிட்டும் நாள்.

சிம்மம்: காலை 11.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் குடும்பத்தினரை அனுசரித்து போங்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.  

கன்னி: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.

துலாம்: உணர்ச்சி பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவு பூர்வமாக செயல்படுவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். சாதிக்கும் நாள்.

விருச்சிகம்: மனஉளைச்சல் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். மனசாட்சி படி செயல்படும் நாள்.

தனுசு: காலை 11.30 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் பற்றுவரவு சுமார்தான். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பர். மாலைப் பொழுதிலிருந்து எதிர்ப்புகள் அடங்கும் நாள்.  

மகரம்:  காலை 11.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்து போகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். எச்சரிக்கை தேவைப்படும் நாள்.

கும்பம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அமோகமான நாள்.    

மீனம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்

Related

புதிய செய்திகள் 4185874229154943851

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item