கோயில்கள்

48 நாட்கள் விரதம் இருக்கும் முறை

48 நாட்கள் விரதம்இருந்து ராஜ ராஜேஸ்வரி அம்மனை தியானிக்க வேண்டும். அவ்வாறு நாம் விரதம் இருக்கும் நாட்களில் நாம் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள...

48 நாட்கள் விரதம்இருந்து ராஜ ராஜேஸ்வரி அம்மனை தியானிக்க வேண்டும். அவ்வாறு நாம் விரதம் இருக்கும் நாட்களில் நாம் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் உள்ளன. அவை :இறைச்சி, மது, தாம்பத்தியம் போன்றவை நீக்கி விரதம் இருக்க வேண்டும். எந்த இடத்தில் விரதம் ஆரம்பிக்கிறோமோ அதே வீட்டிலேயே 48 நாட்களும் விரதம் இருக்க வேண்டும். வேறு வீடுகளிலோ வெளியிலேயோ சென்று விரதம் நிறைவு செய்யக்கூடாது. இரவில் எங்காவது வெளியில் தங்கி விட்டால் விரதம் நிறைவுற்றதாக ஆகிவிடும்.

விரத நாட்களில் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து அம்மனை வணங்க வேண்டும். ராஜ ராஜேஸ்வரி அம்மனின் பிரேம் போடாத எந்திரம் மற்றும் ராஜராஜேஸ்வரி அம்மனின் பிரேம் போட்ட படம் வைத்து, எந்திரம் மற்றும் படத்திற்கு பூக்கள் அணிவித்து தீப, தூப ஆராதனைகள் செய்து வணங்க வேண்டும். ராஜராஜேஸ்வரி அம்மனின் மந்திரத்தை தினமும் உங்களால் முடிந்தவரை சொல்லி வர வேண்டும். 48 நாட்களுக்குள் லட்சம் எண்ணிக்கையை மந்திரம் தொட்டால் மிகவும் சிறப்பு.

எவ்வளவு சுத்தமாக இருந்து அம்மனை நினைத்து தியானம் செய்கிறோமோ கேட்டதை விட அதிகமாக வரங்களை அளிப்பாள் ராஜ ராஜேஸ்வரி. நாம் விரதத்தின் மூலம் மிக உயர்வான சக்திகளை பெற்றுக் கொண்டு வருகிறோம் என்பதை விரதம் இருக்கும் நாட்களில் உணர்ந்து கொள்ளலாம். அனுதினமும் வாழ்க்கையில் நமக்கு துணையாக அம்மன் இருப்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம். 48 நாட்கள் விரதம் முடிந்த பிறகும் தினமும் அம்மன் மந்திரத்தை தொடர்ந்து உச்சாடணம் செய்து கொண்டு வர அதிசய சக்திகளை நாம் பெறலாம். மூன்று வேளைகளும் அம்மனுக்கு பூஜை செய்து வணங்க வேண்டும். அம்மனை மனதார தியானிக்க வேண்டும்.

Related

புதிய செய்திகள் 8433347043057740169

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item