கோயில்கள்

கையெழுத்து சொல்லும். தலையெழுத்து…?

அன்றைக்கு எழுதியதை அழிச்சு எழுதுவானா?’ என்றொரு சொலவடை கிராமப்புறங்களில் உண்டு. தலையெழுத்தை மாற்றமுடியாது என்பதே இதன் கருத்து. ஆனால், தல...


அன்றைக்கு எழுதியதை அழிச்சு எழுதுவானா?’ என்றொரு சொலவடை கிராமப்புறங்களில் உண்டு. தலையெழுத்தை மாற்றமுடியாது என்பதே இதன் கருத்து. ஆனால், தலையெழுத்தை மாற்றவும் முடியும், அழித்துத் திருத்தவும் இயலும் என்கிறார்கள் கையெழுத்து குறித்த ஆராய்ச்சியாளர்கள்.
கையெழுத்து பற்றிய ஆராய்ச்சியை ஆங்கிலத்தில் கிராஃபாலஜி என்று அழைக்கிறார்கள். இந்த கிராஃபாலஜி, ‘மூளையின் செயல்பாடுகளே உடலின் அவயவங்களை இயக்குகின்றன. ஆக, உடல் உறுப்புகளின் செயல்களைக் கணிப்பதன் மூலம் நம் சிந்தனைகள் எப்படியானவை, அவற்றின் விளைவால் எதிர்காலம் எப்படி அமையும் என யூகிக்க முடியும்’ என்கிறது.
உதாரணமாக, ஒருவர் எப்போதும் பேனாவால் காகிதத்தில் கிறுக்கிக்கொண்டே இருக்கிறார் எனில், அவர் குழப்பத்தில் இருக்கிறார் என்று அர்த்தம். வெறும் கிறுக்கல்களாக இல்லாமல், தனது கையெழுத்தையே அடிக்கடி போட்டுப் பார்த்துக்கொண்டிருக்கிறார் எனில், ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் அவர் வெற்றியைச் சந்திப்பது நிச்சயமாம்.
அதேபோன்று ஒருவர் கையெழுத்து இடுவதை வைத்தே அவரது குணநலன்களையும் செயல்பாடுகளையும் அவற்றால் எழும் விளைவுகளையும் சொல்லிவிட முடியும் என்பது அவர்களது கருத்து.
ஒருவரது சிந்தனையையும் அதன் விளைவான செயல்பாடுகளையும் கையொப்பம் பிரதிபலிக்கும். தக்க முறையில் கையெழுத்து இடப் பழகுவதன் மூலம், நமது மூளையும் நலம்படச் சிந்திக்கப் பழகும்; அதன் விளைவு நமக்கு நலமாக அமையும் என்கிறது கிராஃபாலஜி.
நமது கையெழுத்து கோழிக் கிறுக்கலாக இல்லாமல், தெளிவாக இருப்பது அவசியம். கிறுக்கலான கையெழுத்துக்கு உரியவரது வாழ்க்கை குழப்பமாகவே இருக்கும்.
கையொப்பம் ஆரம்பமாகும் இடத்திலிருந்து 45 டிகிரி கோணத்தில் மேல்நோக்கி சென்று முடியவேண்டும். இப்படியான கையெழுத்துக்குச் சொந்தக் காரர்கள், வாழ்வில் உயரத்தை எட்டுவதில் தடைகள் இருக்காது.
ஒரே நேர்க்கோட்டில் இருப்பதாக அமையும் கையெழுத்தைக் கொண்டவர்களுக்கு வாழ்வில் இன்ப- துன்பங்கள் சமமாக அமையும். கையொப்பம் முடியும்போது கீழ்நோக்கிச் சறுக்கலாக அமைவதாக இருக்கக்கூடாது.
கையொப்பம் போட்டுவிட்டு இறுதியாக முற்றுப்புள்ளி வைப்பது கூடாது. அதேபோன்று, கையொப்பத்தின் கீழ் அடிக்கோடு இடுவதையும் தவிர்த்தல் வேண்டும்.
பெயரின் கடைசி எழுத்தை கீழ்நோக்கி நீட்டி கையொப்பத்தை நிறைவு செய்வதும் கூடாது. கீழ்நோக்கி முடியும் எழுத்தாக இருந்தாலும், அதன் அடிமுனையை சற்றே மேல்நோக்கி நீட்டி முடிப்பது நலம்.
மேற்சொன்ன விஷயங்களை கவனத்தில் கொண்டு தினமும் கையொப்பம் போட்டுப் பழகலாம். உங்கள் கையெழுத்தை ஆட்டோகிராஃபாக மாற்றும் முயற்சியில்தான் உங்கள் வாழ்க்கையின் வெற்றி அமைகிறது. முயற்சியுங்கள் வெற்றி நிச்சயம்!

Related

புதிய செய்திகள் 1750453819548246156

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item