கோயில்கள்

இருவர் நல்லூரில் செருப்புடன் நடமாடினார்கள்-பொலிசார் தாக்கியதால் பரபரப்பு

நல்லுாரில் செருப்புடன் நடமாடிய இருவரை சப்பாத்துடன் வந்த பொலிசார் தாக்கியதால் பரபரப்பு!! நல்லூரில் காலில் செருப்புடன் நடமாடினார்கள் என இரு...


நல்லுாரில் செருப்புடன் நடமாடிய இருவரை சப்பாத்துடன் வந்த பொலிசார் தாக்கியதால் பரபரப்பு!! நல்லூரில் காலில் செருப்புடன் நடமாடினார்கள் என இரு இளைஞர்களை யாழ்ப்பாண பொலிசார் திங்கட்கிழமை இரவு கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரு இளைஞர்கள் மீதும் ஆலய சூழலில் செருப்புடன் நடமாடினார்கள் என குற்றம் சுமத்தப்பட்டு அவர்கள் இருவரையும் செவ்வாய்க்கிழமை யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றார்கள்.

நல்லூர் மகோற்சவ திருவிழா தற்போது நடைபெற்று வருகின்றது. அதனை முன்னிட்டு ஆலய சூழலில் காலணிகளுடன் நடமாட வேண்டாம் என ஆலய நிர்வாகம் ஆலயத்திற்கு வருவோரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அந்நிலையில் திங்கட்கிழமை இரவு திருவிழா முடிவடைந்த பின்னர் , இரு இளைஞர்கள் ஆலயத்தின் பின் வீதிவழியாக காலில் செருப்புடன் சென்று கொண்டிருந்தனர்.

அதனை அங்கு சிவில் உடையில் கடமையில் இருந்த இரு பொலிசார் கண்ணுற்று இரு இளைஞர்களையும் மறித்து செருப்புடன் செல்ல கூடாது என தெயரியாதா ? என கேட்டு அவர்கள் மீது கைகளால் தாக்கியுள்ளனர்.

அதனை கண்ணுற்ற ஆலய வீதியில் இருந்தவர்கள் செருப்புடன் சென்றதற்காக அவர்களை தாக்குவீர்களா ? என சிவில் உடையில் நின்ற பொலிசாருடன் கேள்வி எழுப்பி இருந்தனர்.

அதனை தொடர்ந்து அவ்விடத்திற்கு சீருடையுடன் காலில் சப்பாத்துடன் வந்த பொலிசார் ஒருவர் குறித்த இரு இளைஞர்களையும் சந்தேகத்தில் கைது செய்கிறேன் என கூறி இருவரையும் கைது செய்து யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று அவர்கள் இருவரையும் பொலிஸ் காவலில் தடுத்து வைத்துள்ளனர்.

குறித்த இரு இளைஞர்களையும் செவ்வாய்க்கிழமை காலை யாழ்,நீதவான் நீதிமன்றில் முற்படுத்த உள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

அதேவேளை கடந்த 16ம் திகதி நல்லூரை தரிசிக்கச் சென்ற எதிர்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் ஆலய நடைமுறையை மீறி ஆலய சூழலுக்கு தனது வாகனத்தில் சென்று வழிப்பாட்டை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related

புதிய செய்திகள் 3467790445137797274

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item