கோயில்கள்

சிவன் சிலை முன்னால் நரபலி..! அதிர்ச்சியில் பக்கதர்கள்...! (Video)

சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவா நகரில் ஐரோப்பிய அணு ஆராய்ச்சி அலுவலகம் அமைந்துள்ளது. இந்த கட்டிடத்திற்கு அருகில் அமைந்துள்ள சிவன் சிலை முன்ன...

சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவா நகரில் ஐரோப்பிய அணு ஆராய்ச்சி அலுவலகம் அமைந்துள்ளது. இந்த கட்டிடத்திற்கு அருகில் அமைந்துள்ள சிவன் சிலை முன்னால் நரபலி கொடுப்பது போன்ற தான் இந்த காட்சிகள் இடம் பெற்ற வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

சில தினங்களுக்கு முன்னால் யுடியூபில் பதிவேற்றப்பட்ட வீடியோ ஒன்றில் இந்த பயங்கர காட்சிகள் பதிவாகியுள்ளன. சிவன் சிலைக்கு முன்னால் சிலர் கருப்பு உடை அணிந்துக்கொண்டு சுற்றி வருகின்றனர்.

இவர்களில் மத்தியில் ஒரு பெண்ணும் வருகிறார். சில நிமிடங்களுக்கு பிறகு அப்பெண் கீழே படுக்கிறார்.அப்போது, நபர்களில் ஒருவர் கத்தியை ஓங்கி கீழே படுத்திருக்கும் பெண்ணை வெட்டுவது போல் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இக்காட்சியை தூரத்தில் இருந்து ஒருவர் கைப்பேசியில் படம் பிடித்தாக தெரிகிறது. இந்த வீடியோ வெளியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆனால் ஐரோப்பிய அணு ஆராய்ச்சி துறை அதிகாரிகள் இதனை முற்றிலுமாக மறுத்துள்ளனர்.

இது குறித்து பத்திரிகை ஒன்றிற்கு அவர்கள் பேட்டியளித்தபோது, இந்த அலுவலகத்திற்கு மாணவர்கள் அடிக்கடி வந்து செல்வது வழக்கம். மேலும், மாணவர்கள் நகைச்சுவைக்காக இதுபோன்ற நாடகங்களில் ஈடுபடுகின்றார்கள். மாணவர்களின் இச்செயலை வன்மையாக கண்டிக்கிறோம்.

சிவன் சிலைக்கு முன்னால் யாரும் நரபலி கொடுக்கவில்லை. பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Related

புதிய செய்திகள் 2610184867596915574

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item