கோயில்கள்

அறநெறி

நாம் காணும் இந்த தோற்ற பிரபஞ்சம் முழுமையாக நமக்கு காட்சியளிக்கிறதா? அப்படி இல்லை. நாம் நமக்கேற்ற புலன் தகவமைப்புக்கேற்ற அளவே இப்பிரபஞ...நாம் காணும் இந்த தோற்ற பிரபஞ்சம் முழுமையாக நமக்கு காட்சியளிக்கிறதா? அப்படி இல்லை. நாம் நமக்கேற்ற புலன் தகவமைப்புக்கேற்ற அளவே இப்பிரபஞ்சத்தை அறிகிறோம். நாம் ஓர் முழுமையானபிரபஞ்சத்தை அறிவதில்லை. நாம் கண்ணுறும் இந்த பிரபஞ்சம் நமது புலன்களால் நமக்காக படைக்கப்பட்டது. நமது புலன்களின் திறனுக்கேற்ற பிரபஞ்சம் நமது. இந்த பிரபஞ்சம் என்கிற அனுபவம் நாம் காணும் இப்புவி கோலத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்திற்கும்  ஒவ்வொரு பரிமாணத்தில் வெளிப்படுவதாகவே இருக்கும். காரணம் ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒவ்வொரு வகையான புலன்கள் அமைந்திருப்பதை காண்கிறோம். புலன்களின் வழியாக மட்டுமே இப்பிரபஞ்சத்தை உயிர்கள் அறிகிறது. மனிதனுக்கு பூமியாக,சந்திரனாக,மற்ற கோள்களாக வான்வெளியில் நட்சத்திர கூட்டங்களாக தோன்றும் இப்பிரபஞ்சம், கண் இல்லாத ஆனால் மற்ற புலன்கள் உள்ள ஒரு ஜீவா ராசிக்கு எப்படி தோற்றமளிக்கும்? ஒவ்வொரு உயிரினமும் அவ்வவ் வுயிர்க்கான புலன் தகவமைப்புக்கேற்றவாறு பிரபஞ்சத்தை தோற்றப்படுத்திக் கொண்டாலும், இந்த ‘நான்’ என்பது எல்லாவுயிர்க்கும் பொதுவாகவே செயல்பாட்டு நிலையில்  உள்ளதையும் காண்கிறோம். நாம் கண்ணுறும் எந்த உயிரும் இந்த ‘நான்’ என்கிற தன்மையை அறியாததாக இல்லை. அறிவியலார் ஒரு செல் உயிரியான பாக்டீரியாவிடமும் இந்த நான் , நாங்கள், மற்றவைகள் என்கிற மூவிதன்மைகள் செயல்பாட்டில் உள்ளதை கண்டுபிடித்துள்ளனர். இந்த செயல்பாடு அந்த பாக்டீரியாவில் மிக சிறு அளவிலான அமில நகர்வாக இருப்பதை கண்டு பிடித்து உலகுக்கு அறிவித்துள்ளனர். அனைத்துயிரினங்களுக்கும் அவ்வவ்வகைக்கு ஏற்றவாறு பிரபஞ்ச அனுபவம் இருந்தாலும் இந்த ‘நான்’ என்கிற பதத்தில் ஒரே விதமாகவே உள்ளது. இதன் அடிப்படை ‘நான் இருக்கிறேன் மற்றும் இப்பிரபஞ்சம்’ உள்ளது.

Related

புதிய செய்திகள் 6893147437460307669

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item