கோயில்கள்

சிவலிங்கம்

சிவாலயங்களில் உள்ள கருவறையில் இறைவன் சிவலிங்க திருமேனியாக எழுந்தருளியிருப்பார். இத்தகைய சிவலிங்க திருமேனிகள் சுயம்புலிங்கம், பாணலிங்கம்...


சிவாலயங்களில் உள்ள கருவறையில் இறைவன் சிவலிங்க திருமேனியாக எழுந்தருளியிருப்பார். இத்தகைய சிவலிங்க திருமேனிகள் சுயம்புலிங்கம், பாணலிங்கம், பிருத்வி லிங்கம், பார்த்தப்ரகர லிங்கம் என பலவகைப்படும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறந்ததாகும்.
திருச்சி மாவட்டம் லால்குடிக்கு அருகில் உள்ள சவுந்தரநாயகி சமேத பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் சிவலிங்க திருவுருவம் உருத்திராக்க திருமேனியாகும். இது ஒரு அபூர்வமான அமைப்பு.

தலைப்பாகமான (உருத்ரபீடம்) லிங்க திருமேனியில் கண்ணுக்கு தெரியாதவாறு சிறு, சிறு துவாரங்கள் அமைந்துள்ளன. மெல்லிய ஊர்க்குகளை அத்துவாரத்தினுள் செலுத்தினால், அவைகள் உட்சென்று மறையும்.

சிவபெருமானுடன் தொடர்புடைய உருத்திராக்கத்தையே திருமேனியாகக்கொண்டு அமையப்பெற்ற இத்தகைய சிவலிங்க திருவுருவம், வேறு எங்கிலும் காண அரியதாகும். இத்திருவுருவம் இத்தலத்திற்கு மேலும் பெருமை சேர்க்கிறது

Related

புதிய செய்திகள் 1025944844402288560

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item