கோயில்கள்

இறை நம்பிக்கை

தூய்மையான இறை நம்பிக்கை கொண்ட வர்கள், ‘நாம் சரியாக நடந்து கொண்டால், நமக்குரிய விளைவும் சரியானதாகவே இருக்கு ம்’ என்ற மனத்தெளிவு பெற்றவர்க ளா...

தூய்மையான இறை நம்பிக்கை கொண்ட வர்கள், ‘நாம் சரியாக நடந்து கொண்டால், நமக்குரிய விளைவும் சரியானதாகவே இருக்கு ம்’ என்ற மனத்தெளிவு பெற்றவர்க ளாக இருப்பர். அவர்களுக்கு அதை மீறிய எந்த சலுகையும் தேவை யற்றது. சிவனும், பார்வதியும் வான் வழியாக பூலோகத்தை கவனித்தபடி வலம் வந்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்த நபர், தன்னுடைய வேட்டியில் இருந்த கிழிசலை தைத்துக் கொண்டிருந்தார். அவர் ஒரு சிவபக்தர். தன் பணிகளை செய்தபடி இறை சிந்தனையை தவறாது கடைப்பிடித்து வருபவர்.
அந்த நபரைக் கண்டதும், பார்வதியின் உள்ளம் பாசம் கொண்டது. சிவனைப் பார்த்து, ‘மரத்தடியில் வீற்றிருக்கும் உங்கள் பக்தனைப் பார்த்தீர்களா?’ என்றார்.‘பார்த்தேன்’ என்றார் ஈசன்.                        
அன்னையோ, ‘பார்த்த பிறகு, கண்டும் காணாமல் போவது எப்படி? வாருங்கள். அவருக்கு ஏதேனும் வரம் கொடுத்து வளமை படுத்தி விட்டுப் போகலாம்’ என்று அழைத்தார். ஈசனுக்கு தன்னுடைய பக்தனைப் பற்றி நன்றாக தெரிந்திருந்தது. அவர் பார்வதியிடம், ‘தேவி! அவன் அந்த நிலையை எல்லாம் கடந்தவன். இப்போது அவனிடம் செல்வது வீண் வேலை. வேண்டாம் வா!. நாம் நம் வழியே செல்லலாம்’ என்றார்.

ஆனால் பார்வதி தேவி விடுவதாக இல்லை. சிவபெருமானை வற்புறுத்தி மரத்தடிக்கு அழைத்துச் சென்றார்.

பின்னர் இருவரும் மரத்தடியில் அமர்ந்திருந்த நபரைப் பார்த்து, ‘வணக்கம்’ என்று கூறினர்.

தனக்கு வணக்கம் வைப்பது யார்? என்று தலை நிமிர்ந்து பார்த்த அந்த நபர், எதிரில் நின்ற சிவபெருமானையும், பார்வதியையும் பார்த்து மகிழ்ச்சி அடைந்தார். ‘அடடே.. எம்பெருமானும், பெருமாட்டியும்.. வாருங்கள்! வாருங்கள்!’ என்று வரவேற்று அவர்களுக்கு தாகம் தீர்க்க மோர் கொடுத்து உபசரித்தார்.

பின்னர் தன்னுடைய வேட்டியில் இருந்த கிழிசலை தைக்கும் பணியில் மும்முரமாகி விட்டார்.

சற்று நேரம் பொறுமையாக காத்திருந்த சிவபெருமானும், பார்வதியும்.. ‘சரி.. நாங்கள் புறப்படுகிறோம்’ என்று கூறினர்.

அந்த நபரும், ‘போய் வாருங்கள்’ என்று வணக்கம் செலுத்தி விட்டு, மீண்டும் வேட்டியின் கிழிசலைத் தைக்கத் தொடங்கிவிட்டார்.

பார்வதிதேவி சிவபெருமானை தூண்ட, ஈசன் ‘பக்தனே! நாங்கள் ஒருவருக்கு காட்சி கொடுத்து விட்டால், அவருக்கு வரம் கொடுக்காமல் போவதில்லை. எனவே நீ ஏதாவது கேள்.. தருகிறோம்’ என்றார்.

அந்த நபர் சிரித்தார். ‘வரமா...! உங்கள் தரிசனமே எனக்கு போதுமானது இறைவா! வரம் எதுவும் வேண்டாம். உங்கள் வழியைத் தொடருங்கள்’ என்று சொல்லிவிட்டு மீண்டும் பணியில் ஆழ்ந்தார்.

ஈசனுக்கு இது வீண் வேலை என்று தெரிந்தாலும், அம்பாள் விடுவதாக இல்லையே.. ஏதாவது வரம் கொடுக்காமல் செல்ல மாட்டோம் என்று இருவரும் பிடிவாதமாய் நிற்க.. இறுதியில் அந்த நபர் ஒரு வரம் கேட்டார்.
‘நான் தைக்கும் இந்த ஊசிக்கு பின்னாலேயே நூல் போக வேண்டும். அது போதும்’ என்றார்.
அனைத்தும் அறிந்த சிவன் புன்னகைத்தார்.. பார்வதி திகைத்தார். ‘அதுதான் ஏற்கனவே ஊசிக்குப் பின்னால் நூல் போகிறதே... இதற்கு நாங்கள் ஏன் வரம் தர வேண்டும்?’ என்றார் பார்வதி. ‘அதைத்தான் நானும் கேட்கிறேன். நான் ஒழுங்கு தவறாமல் வாழ்க்கை நடத்தி வருகிறேன். இறைவனையும் தவறாது தொழுது வருகிறேன். ஆகையால் எனக்கு வரவேண்டிய பலன் நியதிப்படி தானாக எனக்கு பின்னால் வருமே. இடையில் நீங்கள் எதற்கு எனக்கு வரம் தர வேண்டும்?’ என்றார் அந்த நபர்.

பார்வதிக்கு உண்மை விளங்கி விட்டது. ஈசனும் பார்வதியின் முகம் தெளிந்ததைக் கண்டு அதைப் புரிந்து கொண்டார்.

ஆம்! தூய்மையான இறை நம்பிக்கை கொண்டவர்கள், ‘நாம் சரியாக நடந்து கொண்டால், நமக்குரிய விளைவும் சரியானதாகவே இருக்கும்’ என்ற மனத்தெளிவு பெற்றவர்களாக இருப்பர். அவர்களுக்கு அதை மீறிய எந்த சலுகையும் தேவையற்றது. 

Related

புதிய செய்திகள் 8164357398512964152

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item