கோயில்கள்

தமிழ் ஆண்டுகள்

ஆண்டுகளைக் கணக்கிட நமது முன்னோர் சுழற்சி முறையில் அறுபது ஆண்டுகள் திரும்பத் திரும்ப வருவதாகக் கணக்கிட்டுத் தந்துள்ளனர்.வான் மண்டலத் தொகுத...


ஆண்டுகளைக் கணக்கிட நமது முன்னோர் சுழற்சி முறையில் அறுபது ஆண்டுகள் திரும்பத் திரும்ப வருவதாகக் கணக்கிட்டுத் தந்துள்ளனர்.வான் மண்டலத் தொகுதி அல்ல ராசி மண்டலத் தொகுதி ஒரு வட்டப் பாதையாக 360 பாகைகளைக் கொண்டு விளங்குகிறது. நாம்முக்கியமானவை என்று கொண்டுள்ள 27 நக்ஷத்திரங்களும் இப்பாதையில் அமைந்துள்ளன. இதன் வழியாகவே ஒன்பது க்ரஹங்களும்சஞ்சரிக்கின்றன. 360 பாகைகளில் 12 ராசிகள் அடங்கியுள் ளன. எனவே ஒவ்வொரு ராசியும் 30 பாகைகளைக் கொண்டுள்ளது. சூரியன் வான்பாதையில் தினசரி 1 பாகை செல்கிறது. ஒருமுறை சுற்றிவர 365 நாள் 6 மணி நேரம் ஆகிறது.
குரு சுமார் ஒரு வருடத்தில் ஒரு ராசியைத் தாண்டும். சனி மாதத்துக்கு ஒரு பாகை நகரும். எனவே குரு ஒரு தடவை வான வட்டத்தைச் சுற்றி
வர 12 வருடங்கள் ஆகின்றன. சனி ஒரு தடவை வான வட்டத்தைச் சுற்றி வர 30 வருடங்கள் ஆகின்றன.

சனியும் குருவும் சேர்ந்து அசுவதி நக்ஷத்திரத்தில் அறுபது ஆண்டுகளுக்கு ஒரு முறை காணப்படுகிறது. அதுவே பிரபவ வருடம்-இதுவே முதல்
வருடம். இதிலிருந்து 60 வருடங்கள் கணக்கிடப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டின் பெயரும் காரணப் பெயராக அமைந்துள்ளது.

ஆண்டுகள் 60

1.பிரபவ
2.விபவ 
3.சுக்கில 
4.ப்ரமோதூத
5 ப்ரஜோத்பத்தி
6.ஆங்கிரஸ 
7. ஸ்ரீமுக 
8.பவ 
9.யுவ
10.தாது 
11.ஈசுவர
12.வெகுதான்ய
13.ப்ரமாதி
14.விக்கிரம 
15.விஷு 
16.சித்ரபானு
17.சுபானு 
18.தாரண 
19.பார்த்திப
20.விய
21.ஸர்வஜித்
22.ஸர்வதாரி
23.விரோதி 
24.விக்ருதி 
25.கர 
26.நந்தன
27.விஜய 
28.ஜய 
29.மன்மத
30.துர்முகி 
31.ஹேவிளம்பி
32.விளம்பி 
33.விகாரி 
34.சார்வரி
35.ப்லவ 
36.சுபகிருது 
37.சோபகிருது 
38.குரோதி 
39.விசுவாவசு
40.பராபவ 
41.ப்லவங்க 
42.கீலக 
43.சௌமிய
44.சாதாரண 
45.விரோதிகிருது
46.பரிதாபி
47.ப்ரமாதீ
48.ஆனந்த
49.ராக்ஷஸ
50.நள
51.பிங்கள
52.களயுக்தி
53.சித்தார்த்தி
54.ரௌத்ரி
55.துன்மதி
56.துந்துபி
57.ருத்ரோத்காரி
58.ரக்தாக்ஷி
59.குரோதன
60.அக்ஷய

Related

புதிய செய்திகள் 7440711552857332175

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item