கோயில்கள்

ஆடிவெள்ளி

ஆடி மாதம் என்றாலே தெய்வீகம் கமழும். இதை அம்மன் மாதம், அம்பாள் மாதம் என்று அழைப்ப துண்டு. வீடுகளிலும், கோயில்களிலும் விழாக்க ளும், விரத வழ...

ஆடி மாதம் என்றாலே தெய்வீகம் கமழும். இதை அம்மன் மாதம், அம்பாள் மாதம் என்று அழைப்ப துண்டு. வீடுகளிலும், கோயில்களிலும் விழாக்க ளும், விரத வழிபாடுக ளும் களைகட்டி விடும். ஆடியில் வரும் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் விசேஷமானவை. அம்பிகை வீற்றிருக்கும் ஆலயங்களில் சிறப்பு பூஜைகள், ஹோமங்கள், பால்குட உற்சவம், பூச்சொரிதல், சந்தனக்காப்பு போன்றவை விமரிசையாக நடைபெறும்.ஆடி செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், அம்பாளை வழிபட பெண்களின் மாங்கல்ய பாக்கியம் கிட்டும். ஆடி வெள்ளியில் வழிபட்டால், திருமண பாக்கியம் கைகூடும், குழந்தை வரம் கிடைக்கும். அம்பாள் குளிர்ந்த மனத்துடன் வேண்டும் வரங்களை நல்குவாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆடி ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனைகளையும், நேர்த்திக்கடனையும் செலுத்தும் நாளாக கருதப்படுகிறது. 

வெள்ளிக்கிழமை ராகு காலத்தில், துர்க்கையம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றினால் கன்னிப்பெண்களுக்கு உடனடியாக திருமணம் நடைபெறும். அன்றைய தினம் விரதம் இருந்து அம்மனை மனம் உருக வழிபட்டால் பெண்களின் மனக்குறை தீரும். வறுமை ஒழிந்து செல்வம் சேரும் என்று ஆன்மிகப் பெரியவர்கள் கூறுகிறார்கள்


Related

புதிய செய்திகள் 5527401993764097264

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item