கோயில்கள்

ஆடி செவ்வாய்க்கிழமை வழிபாடு

ஆடி மாத செவ்வாய்க்கி ழமைகளில் செவ்வாய் தோஷம், நாக தோஷம் நீங்கும் என்றும் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும். ஆடிமா...


ஆடி மாத செவ்வாய்க்கி ழமைகளில் செவ்வாய் தோஷம், நாக தோஷம் நீங்கும் என்றும் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும். ஆடிமாதம் அம்மனுக்கு உகந்தது. அகத்தீஸ்வர சுவாமி கோவில் ஆடி மாதம் வரும் செவ்வாய்க்கிழமைகளில் விரதமிருந்து வழிபாடு செய்வதால் அனைத்து விதமான தோஷங்களும் நிவர்த்தியாகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. ஆடி செவ்வாயில் வழிபாடு செய்தால் திருமண தடை நீக்கும் என்பதால் பெண்கள்,ஆண்கள் என அனைவரும் போட்டி போட்டு வழிபாடு செய்கின்றனர். 
செவ்வாய் தோஷம் :
ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் கிரகம் இருந்தால் செவ்வாய் தோஷம். செவ்வாய்க்கு பல்வேறு காரணங்களால் தோஷ நிவர்த்தி உண்டாகும். அவ்வாறு தோஷ நிவர்த்தி பெற்றாலும்கூட அதேபோல் 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருக்கும் ஜாதகத்தை மட்டுமே சேர்க்க வேண்டும்.

ராகு - கேது தோஷம் :

லக்னம், 2, 7, 8 ஆகிய இடங்களில் ராகு அல்லது கேது இருப்பதால் சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது. இந்த தோஷ அமைப்பு உள்ள ஜாதகங்களை அதே சம தோஷம் உள்ள ஜாதகத்துடன் சேர்ப்பதே தோஷ நிவர்த்திக்கு பரிகாரமாகும். உதாரணமாக லக்னத்தில் ராகு அல்லது கேது இருந்தால் அதேபோல் லக்னத்தில் ராகு அல்லது கேது உள்ள ஜாதகத்தை சேர்ப்பதே பொருத்தமாகும்

Related

புதிய செய்திகள் 4635670159571985606

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item