கோயில்கள்

இன்றைய ராசிபலன் 02.09.2016

மேஷம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் ...

மேஷம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்பு தொல்லை குறையும்.
வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். கனவு நனவாகும் நாள்.
ரிஷபம்: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

மிதுனம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொத்து பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள்.

கடகம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். தோற்றப் பொலிவுக் கூடும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். மகிழ்ச்சியான நாள்.

சிம்மம்: இரவு 8.00 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் பல வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். உங்கள் திறமையை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.

கன்னி: கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும். சொந்த-பந்தங்களால் பிரச்னைகள் வரக்கூடும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். இரவு 8.00 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

துலாம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். அதிகார பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். எதிராகப் பேசியவர்கள் வளைந்து வருவார்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். இனிமையான நாள்.

விருச்சிகம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். மதிப்புக் கூடும் நாள்.

தனுசு: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடிவடையும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். திட்டம் நிறைவேறும் நாள்.

மகரம்: இரவு 8.00 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடியுங்கள். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.

கும்பம்: பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப்படுத்துவீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். மனைவிவழியில் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். இரவு 8.00 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

மீனம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். தொட்டது துலங்கும் நாள்.

Related

புதிய செய்திகள் 21731910589142361

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item