கோயில்கள்

இன்றைய ராசிபலன் 04.09.2016

  மேஷம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள...

  மேஷம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.
வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர் கள். தொட்டது துலங்கும் நாள்.

ரிஷபம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். உங் களைச் சுற்றியிருப்பவர்களின் பலம் பலவீ னத்தை உணர்வீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். கனவு நனவாகும் நாள்.

மிதுனம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். மனதிற்கு இதமான செய்தி வந்து சேரும். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

கடகம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும். உறவினர்களால் அனுகூலம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். தைரியம் கூடும் நாள்.

சிம்மம்: கணவன்-மனைவி க்குள் அன்யோன்யம் பிறக்கும். அழகு, இளமைக் கூடும். எதிர்பாராத இடத்திலி ருந்து உதவிகள் கிடைக்கும். உடல் நலம் சீராகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

கன்னி: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும். உதவிக் கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.

துலாம்: குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். வெளி வட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். போராடி வெல்லும் நாள்.

விருச்சிகம்: குடும்பத்தி னருடன் மனம் விட்டு பேசுவீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரி டும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். இனிமையான நாள்.

தனுசு: கடந்த கால சுகமான அனுபவங் களை, சாதனைகளை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர்கள். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

மகரம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். நண்பர்கள் உதவுவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

கும்பம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் ஒரே முயற்சி யில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். உங்களைப் பற்றி தவறாக சிலர் பேசினாலும் அதற்காக வருத்தப்படாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். விட்டுக் கொடுக்க வேண்டிய நாள்.

மீனம்: பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். மனைவி வழியில் ஒத்து ழைப்பு அதிகரிக்கும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். நன்மை கிட்டும் நாள்.

Related

புதிய செய்திகள் 7351001257125594657

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item