கோயில்கள்

இன்றைய ராசிபலன் 06.09.2016

மேஷம் பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நண்பர்களாவார...

மேஷம்

பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நண்பர்களாவார்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். 
அதிஷ்ட எண்: 9 
அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் 
 ரிஷபம

குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். அரசால் அனுகூலம் உண்டு. விருந்தினர்களின் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள்.
அதிஷ்ட எண்: 8 

அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு
 மிதுனம்

புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.
அதிஷ்ட எண்: 1 

அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்
 கடகம்

நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வரக்கூடும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். புது வேலை அமையும். எதிர்ப்புகள் அடங்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 5 

அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை
 சிம்மம்

சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.
அதிஷ்ட எண்: 3 

அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை
 கன்னி

கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பிரபலங்களின் நட்பு கிட்டும். அரசால் ஆதாயம் உண்டு. சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார்.
அதிஷ்ட எண்: 7 

அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்
 துலாம்

ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். யாரும் உங்களை புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம்.
அதிஷ்ட எண்: 6 

அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை
 விருச்சிகம்

கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். உணவில் காரம், வாயு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். 
அதிஷ்ட எண்: 9 
அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்

 தனுசு

குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள்.
அதிஷ்ட எண்: 4 

அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்
 மகரம்

தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். நீண்ட நாள் பிரச்னைகள் தீரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும்.
அதிஷ்ட எண்: 2 

அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை
 கும்பம்

குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள்.
அதிஷ்ட எண்: 5 

அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே
 மீனம்

சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரு வித படபடப்பு வந்து செல்லும். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது.
அதிஷ்ட எண்: 3 

அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்

Related

வாழ்க்கை 4247465922197216820

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item