கோயில்கள்

இன்றைய ராசிபலன் 09.09.2016

மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சின்ன சின்ன அவமானங்கள், மனக்கலக்கங்கள் வந்துபோகும். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. ...

மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சின்ன சின்ன அவமானங்கள், மனக்கலக்கங்கள் வந்துபோகும். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.முன் கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

ரிஷபம்: எதையும் தன்னம்பிக்கையுடன் செயல்படத் தொடங்குவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. பயணங்களால் பயனடைவீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். அலுவலகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

மிதுனம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். அறிவுப்பூர்வமாக பேசி எல்லோரையும் கவருவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அமோகமான நாள். 

கடகம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் சில தந்திரங்களைக் கற்றுக் கொள்வீர்கள்.   உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கனவு நனவாகும் நாள்.   

சிம்மம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பிள்ளைகளால் நிம்மதி கிடைக்கும். தாய்வழி உறவினர்களுடன் மனத்தாங்கல் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

கன்னி: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அரசால்ஆதாயம் உண்டு. பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். வெற்றி பெறும் நாள்.

துலாம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிட்டும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். உற்சாகமான நாள்.

விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு, தாழ்வுமனப்பான்மை வந்துச் செல்லும். வாக்குறுதிகளை நிறைவேற்றப் போராட வேண்டியிருக்கும். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

தனுசு: தேவையற்ற விஷயங்களை மனதில் நினைத்து குழம்பிக் கொண்டிருக்காதீர்கள். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். யாரையும் எடுத்தெரிந்து பேச வேண்டாம். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும்.   உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். போராடி வெல்லும் நாள்.

மகரம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய கடன் பிரச்னைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களை நம்பி புது பொறுப்பை ஒப்படைப்பார். சிறப்பான நாள். 

கும்பம்: சாதித்துவிடுவோம் என்ற ஒரு நம்பிக்கை பிறக்கும். உறவினர், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்
கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

மீனம்: பிரச்னைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

Related

புதிய செய்திகள் 2691493568208988338

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item