கோயில்கள்

இன்றைய ராசிபலன் 11.09.2016

மேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். நீங்கள் கைமாற்றாகவாங்கியிருந்த பணத்தை திர...


மேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். நீங்கள் கைமாற்றாகவாங்கியிருந்த பணத்தை திருப்பி தருவீர்கள்.
நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத் தாகும். புதிய பாதை தெரியும் நாள்.

ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் உணர்ச்சி வசப் படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் வந்துப் போகும். மற்றவர்கள் விஷயத்தில் அத்துமீறி மூக்கை நுழைக்க வேண்டாம். வியாபாரத் தில் பற்று வரவு சுமார்தான். திட்டமிட்ட காரியங்கள் தடைப்பட்டு முடியும் நாள்.

மிதுனம்: குடும்பத்தில் கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்து போகும். தாயாரின் உடல் நிலை சீராகும். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். தன்னம்பிக்கை பெருகும் நாள்.

கடகம்: குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள். 

சிம்மம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். உங்கள் பிள்ளைகளின் தனித்திறமைகளை  நீங்கள் கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்புவழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். கனவு நனவாகும் நாள்.

கன்னி: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாய் வழி உறவினர் களால் அலைச்சல் ஏற்படும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். பயணங் களால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

துலாம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகளை நீங்கள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு பக்கபலமாக இருப்பார்கள். சொத்துப் பிரச்னையில் சுமூக தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

விருச்சிகம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உரு வாகும். சில வேலைகளை நீங்கள் விட்டு கொடுத்து முடிப்பீர்கள். கேட்ட இடத்தில் உங்களுக்கு பணம் கிடைக்கும். கோபம் குறையும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் வரும். உற்சாகமான நாள்.

தனுசு: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். பண விஷயத்தில் சாக்கு போக்கு சொல்லி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

மகரம்: குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். யாருக்கும் பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். உறவினர், நண்பர்களால் சங்கடங்கள் வரும். லேசாக தலை வலிக்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். எச்சரிக்கை தேவைப்படும் நாள்.

கும்பம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மனதிற்கு இதமான செய்திகள் வரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். சிறப்பான நாள்.

மீனம்: உங்களின் அணுகு முறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றி அமைத்து கொள்வீர்கள். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

Related

புதிய செய்திகள் 2920021351726919462

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item