கோயில்கள்

இன்றைய ராசி-பலன்கள்-17-09-16

மேஷம்  உடல்நலம் குறித்த பிரச்சினைகள்அசவுகரியத்தை ஏற்படுத்தலாம். நிதிப் பிரச்சினைகள் குற்றச்சாட்டு மற்றும் வாக்குவாதத்துக்கு இட்டுச் செல்ல...

மேஷம் 
உடல்நலம் குறித்த பிரச்சினைகள்அசவுகரியத்தை ஏற்படுத்தலாம். நிதிப் பிரச்சினைகள் குற்றச்சாட்டு மற்றும் வாக்குவாதத்துக்கு இட்டுச் செல்லும் – உங்களிடம் அதிகம் எதிர்பார்ப்பவர்களுக்கு, இல்லை என்று சொல்ல தயார்படுத்திக் கொள்ளுங்கள். சிலருக்கு – குடும்பத்தில் புதிய வரவு கொண்டாட்டம் மற்றும் பார்ட்டிக்கான நேரமாக அமையும். மாலை நேரத்துக்கு ஸ்பெஷலாக ஏதாவது திட்டமிடுங்கள். முடிந்தவரை அதை ரொமாண்டிக்காக ஆக்குங்கள். சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். இன்று உங்களை மகிழ்சியில் ஆழ்த்த உங்கள் துணை சிறந்த முயற்சி எடுப்பார்.

ரிஷபம் 
அதிக மது மற்றும் தாறுமாறாக வண்டி ஓட்டுவதைத் தவிர்த்திடுங்கள். இன்றைக்கு உங்களிடம் வரும் புதிய முதலீட்டு வாய்ப்புகளை பரிசீலனை செய்யுங்கள் – ஆனால் அந்தத் திட்டங்களின் சாத்தியங்களை ஆய்வு செய்த பிறகே வாக்குறுதி கொடுங்கள். உங்களை காயப்படுத்த சிலர் விரும்பலாம் – உங்களுக்கு எதிராக வலுவாக செயல்படுவார்கள் – நீங்கள் இதுபோன்ற மோதல் செயல்களைத் தவிர்த்துவிட வேண்டும் – பிரச்சினையை தீர்த்துக் கொள்ள நீங்கள் விரும்பினால் கண்ணியமாக அதைச் செய்ய வேண்டும். காதல் விவகாரத்தில் அடிமையைப் போல இருக்காதீர்கள். பயணம் பலன் தரும், ஆனால் செலவுமிக்கதாக இருக்கும். இன்று வீட்டு வேலையில் உங்கள் துணைக்கு உங்களால் உதவ முடியாது. இதனால் அவருக்கு மன அழுத்தம் ஏற்படலாம்.

மிதுனம்
ஓய்வில்லாத தன்மை உங்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தலாம். கொஞ்ச தூரம் நடந்து சென்று சுத்தமான காற்றை சுவாசித்து இதைப் போக்கிடுங்கள். உங்களின் பாசிடிவான சிந்தனை உங்களுக்கு அதிகமாக உதவி செய்யும். எதிர்பாராத பில்கள் உங்கள் நிதிச் சுமையை அதிகரிக்கும். துணைவரின் ஆரோக்கியம் உங்களுக்கு கவலை ஏற்பட காரணமாக இருக்கலாம். உங்களின் வெளிப்படையில்லாத வாழ்க்கை துணைவரை டென்சனாக்கும். பிசினஸ் தேவைக்காக மேற்கொள்ளும் பயணம் நீண்டகால அடிப்படையில் பயன் தரும். உங்கள் துணைவர்/துணைவி இன்று வேலையில் மூழ்கி உங்களை கவனிக்க தவறுவார். இதனால் நீங்கள் வருத்தமைவீர்கள்.

கடகம் 
அதிக உற்சாகமாக இருந்தாலும், இன்று உங்களுடன் இருக்க முடியாமல் போனவருக்காக வருந்துவீர்கள். பொழுபோக்கு மற்றும் ஆடம்பரங்களுக்கு அதிகமாக செலவு செய்யாதீர்கள். பிள்ளைகள் மற்றும் முதியவர்கள் மீது அதிக கவனம் தேவைப்படும். ஒருவர் தன் காதலில் வெற்றி பெறுவதைக் காண்பதற்கு உதவி செய்யுங்கள். ஷாப்பிங் செல்லும்போது அதிகம் செலவு செய்வதை தவிர்த்திடுங்கள். இன்று, அருமையான திருமண பந்த்த்தின் இனிமையை தெரிந்து கொள்வீர்கள்.
சிம்மம் 
பொறாமை குணத்தால் சோகமாகவும் மன அழுத்தமாகவும் ஆவீர்கள். ஆனால் அது நீங்களே ஏற்படுத்திக் கொள்ளும் காயம். எனவே இதுபற்றி கவலைப்பட எதுவும் இல்லை. மற்றவர்களின் மகிழ்ச்சி மற்றும் ஆனந்தத்தைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் இதில் இருந்து விடுபட்டு உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள். அனைத்து வாக்குறுதிகளும் நிதி பரிவர்த்தனைகளும் கவனமாக கையாளப்பட வேண்டும். குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவது முக்கியம். காதல் விவகாரம் பற்றி டமாரம் அடிக்க வேண்டாம். நெருக்கமானவர்களுடன் நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நாள் முழுக்க டென்சனாக இருக்கும். உங்கள் துணை இன்று உங்கள் தேவையை நிராகரிக்க கூடும். இதனால் நீங்கள் கோபமடையலாம்.

கன்னி 
அபரிமிதமான சக்தியாக இருப்பீர்கள் – ஆனால் வேலையில் ஏற்படும் அழுத்தம் எரிச்சல் அடையச் செய்யும். அதிக ஆதாயம் தரும் நாள் அல்ல – எனவே பண நிலைமையை சோதித்து செலவுகளை கட்டுப்படுத்துங்கள். குடும்பத்தில் சில பிரச்சினைகள் வரலாம். ஆனால் குடும்பத்தினரின் உதவியால் அவற்றை உங்களால் தீர்க்க முடியும். இதெல்லாம் வாழ்வில் சகஜம். இதில் இருந்து யாரும் தப்ப முடியாது. எல்லோருக்கும் எல்லா நேரமும் சூரிய வெளிச்சமாகவோ அல்லது மேகம் மூடிய இருளாகவோ இருந்துவிடாது. சாக்லேட்டை இஞ்சி மற்றும் ரோஜாக்களின் வாசத்துடன் நீங்கள் நுகர்ந்துள்ளீர்களா? இன்று உங்கள் காதல் வாழ்வு அத்தகைய சுவை உடையதாக இருக்கும். சில சட்ட ஆலோசனைகள் பெறுவதற்கு ஒரு வழக்கறிஞரை சந்திக்க நல்ல நாள் இன்று வாழ்க்கையே இனிமையாக உங்களுக்கு தோன்றும் ஏன் என்றால் உங்கள் துணை உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் ப்ளான் வைத்துள்ளார்.
துலாம் 
உங்கள் உணர்வுகளை, குறிப்பாக கோபத்தைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். ஊகங்கள் அல்லது எதிர்பாராத லாபங்களால் நிதி நிலைமை மேம்படும். குழந்தைகளுக்கு வீட்டு வேலையை முடிக்க உதவிக்கரம் நீட்ட வேண்டிய நேரம். காதலர்கள் குடும்ப உணர்வுகள் பற்றி அதிகம் கவலைப்படுவார்கள். தகவல் தொடர்புகளை கவனமாகக் கையாள வேண்டும். உங்கள் பெற்றோர்கள் உங்கள் துணையை இன்று ஆசீர்வதிப்பார்கள். இதனால் உங்கள் திரும்ண வாழ்வும் மேலும் சிறப்படையும்..

விருச்சிகம் 
கவனமாக வண்டி ஓட்டவும், குறிப்பாக இரவு தாமதமான நேரத்தில் பயணம் செய்யும்போது. இருப்பிடத்துக்கான முதலீடு லாபகரமாக இருக்கும். கெட்ட பழக்கங்களால் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்களிடம் இருந்து விலகியிருங்கள். தினமும் காதலில் விழும் உங்கள் இயல்பை மாற்றிக் கொள்ளுங்கள். இன்று நல்ல ஐடியாக்களாக வைத்திருப்பீர்கள். செயல்பாடுகளில் உங்களுடைய தேர்வுகள் எதிர்பார்த்ததைவிட அதிக லாபத்தை தரும். பவர் கட் அல்லது வேறு காரணத்தால் காலையில் சிரம்ம் ஏற்படலாம்.ஆனல் உங்கள் துணை உங்களுக்கு உதவியாக இருப்பார்.
தனுசு
இன்று உங்கள் உடல் நலம் பற்றி கவலைப்படத் தேவையில்லை. உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்கள் நம்பிக்கையையும் எண்ணத்தையும் ஊக்குவிப்பார்கள். தாமதமான நிலுவைகள் வசூலாகும் என்பதால் பண நிலைமை மேம்படும். விருந்தினர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளாதீர்கள். உங்களின் நடத்தை உங்கள் குடும்பத்தினரை அப்செட் செய்வதோடு மட்டுமின்றி உறவுகளில் இடைவெளியை ஏற்படுத்தக் கூடும். காதலருடன் பழிவாங்கும் வகையில்நடந்து கொள்வதால் எந்தப் பலனும் கிடைக்காது – மாறாக நீங்கள் அமைதியாக இருந்து காதலர் மீதுள்ள உண்மையான உணர்வை விளக்க வேண்டும். சாலையில் தாறுமாறாக வண்டி ஓட்டுவதும் ரிஸ்க் எடுப்பதும் கூடாது. உங்கள் துணை உங்கள் திட்டம் அல்லது ப்ராஜெக்ட்டை பாதிப்படைய செய்யலாம். பொறுமை இழக்காதீர்கள்.

மகரம்

வெற்றிக் கொண்டாட்டங்கள் அளவுகடந்த ஆனந்தத்தைத் தரும். இந்த மகிழ்ச்சியை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு ஆனந்தத்தை அனுபவிக்கலாம். நாளின் பிற்பகுதியில் நிதி நிலைமை மேம்படும். உடனடியாக தேவைப்படாத பொருட்களுக்காக செலவு செய்வதன் மூலம் உங்கள் துணைவரை அப்செட் செய்வீர்கள். நீண்ட காலமாக தீராமல் உள்ள தகராறை இன்று தீர்த்திடுங்கள், நாளை என்பது மிகவும் தாமதமாக இருக்கலாம். நெருக்கமானவர்களுடன் நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நாள் முழுக்க டென்சனாக இருக்கும். உங்கள் துணையை நீங்கள் இன்று தவறாக நினைக்க கூடும் இதனால் நீங்கள் அப்செட்டாக இருப்பீர்கள்.

கும்பம்
இன்றைக்கு ஆரோக்கியம் பூரணமாக இருக்காது. நிதிப் பற்றாக்குறையைத் தவிர்க்க, பட்ஜெட்டை மீறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சும்மா இருக்கும் நேரத்தை பயன்படுத்தி குடும்பத்தினருக்கு உதவுங்கள். இன்று உங்கள் டார்லிங்கின் மனநிலை ஊசலாட்டத்தில் இருப்பதால் ரொமான்ஸ் பாதிக்கும். தொடர்கொள்ளும் முறைதான் இன்றைக்கு உங்களின் முக்கியமான பலம். உங்கள் திருமண வாழ்வில் முன்பிருந்த ஈர்ப்பு இப்போது இல்லாதது போல் இன்று தோன்றக்கூடும். அனினும் இந்த நிலை பழையபடி திரும்பும்.

மீனம் 
உயர் நிலையில் இருப்பவரை சந்திக்கும்போது பதற்றமாகி நம்பிக்கையை இழந்துவிடாதீர்கள். பிசினஸுக்கு முதலீட்டைப் போல நல்ல ஆரோக்கியம் இருப்பதும் முக்கியம். எதிர்பாராத திடீர் செலவு பண நெருக்கடியை ஏற்படுத்தும். நீங்கள் எப்போதும் நம்பியவர் உங்களிடம் மிக நேர்மையாக இல்லை என்பதை அறியும்போது இன்று மிகவும் கவலைப்படுவீர்கள். உங்கள் துணைவரின் உடல்நலன் கெட்டிருப்பதால் இன்று ரொமான்ஸ் பாதிக்கும். இன்றைக்கு நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டாதீர்கள். அதிகம் செலவானதால் உங்கள் துணையுடன் வாக்குவாதம் ஏற்படலாம்.

Related

புதிய செய்திகள் 3034557071390066267

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item