கோயில்கள்

இன்றைய ராசிபலன்கள் 19.09.2016

மேஷம்: அன்றாடப் பணிகளில்அக்கறையுடன் ஈடுபடுவீர்கள். மனதில் தன்னம்பிக்கை மேலோங்கும். தொழில், வியாபாரம், சிறந்து விளங்கும். வருமானம் பன்மடங்...

மேஷம்: அன்றாடப் பணிகளில்அக்கறையுடன் ஈடுபடுவீர்கள். மனதில் தன்னம்பிக்கை மேலோங்கும். தொழில், வியாபாரம், சிறந்து விளங்கும். வருமானம் பன்மடங்கு உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.

ரிஷபம்: உங்களின் பேச்சை சிலர் தவறாக புரிந்து கொள்ளலாம். தொழில், வியாபாரத்தில் இருந்த குறுக்கீடு சரியாகும். லாபம் சுமாராக இருக்கும். பெண்களுக்கு சேமிப்பு பணம் வீட்டுச் செலவுக்கு பயன்படும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

மிதுனம்: மனதில் தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். புதிய முயற்சிகள் இனிதாக நிறைவேறும். தொழில், வியாபார விஷயமாக, வெளியூர் செல்ல நேரிடலாம். உபரி வருமானம் கிடைக்கும். மனைவி விரும்பிய பொருளை வாங்கித் தருவீர்கள்.

கடகம்: குடும்பத்தினரின் ஆதரவைப் பெற்று மகிழ்வீர்கள். தொழில், வியாபார வளர்ச்சிக்கான வாய்ப்பு கிடைக்கும். எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். பணியாளர்கள் கூடுதல் சலுகை கிடைக்கப் பெறுவர்.

சிம்மம்: சிலரது பேச்சு உங்களை சங்கடப்படுத்தலாம். எவருக்கும் தகுதிக்கு மீறிய வாக்குறுதி தர வேண்டாம். தொழிலில், லாபம் சுமாராக இருக்கும். உடல் நலனுக்காக மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம்.

கன்னி: கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில், குறுக்கீடு வந்து பின்னர் சரியாகும். அளவான வருமானம் கிடைக்கும். பிள்ளைகளின் வளர்ச்சியில் அக்கறை கொள்வீர்கள். இஷ்ட தெய்வ வழிபாடு சிறக்கும்.

துலாம்: பொறுமையுடன் செயல்பட்டு நன்மை காண்பீர்கள். தொல்லை கொடுத்தவர் இடம் மாறிப் போவர். தொழில், வியாபார வளர்ச்சியில், புதிய சாதனை உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். நண்பருடன் விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள்.

விருச்சிகம்: மனதில் உற்சாகம் அதிகரிக்கும். குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். தொழில், வியாபார வளர்ச்சியால், தாராள பணவரவு கிடைக்கும். பெண்கள் நீண்ட நாள் வாங்க நினைத்த பொருளை வாங்குவர்.

தனுசு: பெருந்தன்மை குணத்துடன் நடந்து கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில், வேலைப்பளு அதிகரிக்கும். லாபம் படிப்படியாக உயரும். உடல் நலனில் அக்கறை தேவை. பெண்கள், ஆடை, ஆபரணம் வாங்க வாய்ப்புண்டு.

மகரம்: நண்பர்களிடம் வாக்குவாதம் செய்ய வேண்டாம். தொழில், வியாபாரத்தில், மந்தகதி நிலவும். லாபம் சுமாராக இருக்கும். பெண்களுக்கு தாய் வீட்டினரின் உதவி கிடைக்கும். உடல்நிலை சீராக இருக்கும்.

கும்பம்: உற்சாக மனதுடன் செயல்படுவீர்கள். நீண்டநாள் திட்டமிட்ட செயல் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில், மூலதனத்தை அதிகப்படுத்துவீர்கள். நிலுவைப் பணம் வசூலாகும். எதிர்பார்த்த வகையில், நண்பர்களின் உதவி கிடைக்கும்.

மீனம்: உங்களின் வளர்ச்சி கண்டு அனைவரும் புகழ்ந்து பேசுவர். தொழில், வியாபாரத்தில், குளறுபடி உண்டாகி மறையும். அளவான பணவரவு கிடைக்கும். பெண்கள் சிக்கனமாக செலவழித்து சேமிக்க முயல்வர்.

Related

புதிய செய்திகள் 181572678313752977

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item