கோயில்கள்

21 வகை இலைகளும் பலன்களும்...

21 வகை இலை அர்ச்சனையும் கிடைக்கும் பலனும் விநாயகர் சதுர்த்தி அன்று 21 வகை இலை கொண்டு அர்ச்சனை செய்வதால் கிடைக்கும் பலன்கள் என்னவென்று பார்க...

21 வகை இலை அர்ச்சனையும் கிடைக்கும் பலனும் விநாயகர் சதுர்த்தி அன்று 21 வகை இலை கொண்டு அர்ச்சனை செய்வதால் கிடைக்கும் பலன்கள் என்னவென்று பார்க்கலாம்.
விநாயகரை 21 வகையான இலைகளைக் கொண்டு அர்ச்சிப்பது சிறந்தது எனப்படுகின்றது. வகைக்கு 21 பதிரங்களைத் தேர்ந்து கொள்வது நலம்பல பயக்கும் என்பர்.  அவ்வாறான பத்திரங்களும், அவற்றைக் கொண்டு அர்ச்சிப்பதனால் அடையக்கூடிய பலாபலன்கள் பற்றிய விபரங்களும் வருமாறு:-

1. முல்லை இலை:  அறம் வளரும்

2. கரிசலாங்கண்ணி இலை:  இவ்வாழ்க்கைக்குத் தேவையான பொருள் சேரும்.

3. விஸ்வம் இலை:  இன்பம், ஜவிரும்பியவை அனைத்தும் கிடைக்கும்.

4. அருகம்புல்:  அனைத்து சவுபாக்கியங்களும் கிடைக்கும்.

5. இலந்தை இலை:  கல்வியில் மேன்மையை அடையலாம்.

6. ஊமத்தை இலை:  பெருந்தன்மை கைவரப் பெறும்.

7. வன்னி இலை:  பூவுலக வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கப் பெறும்.

8. நாயுருவி:  முகப் பொலிவும், அழகும் கூடும்.

9. கண்டங்கத்திரி:  வீரமும், தைரியமும் கிடைக்கப் பெறும்.

10. அரளி இலை:  எந்த முயற்சியிலும் வெற்றி கிடைக்கும்.

11. எருக்கம் இலை:  கருவிலுள்ள சிசுவுக்கு பாதுக்காப்புக் கிடைக்கும்.

12. மருதம் இலை:  மகப்பேறு கிடைக்கும்

13. விஷ்ணுகிராந்தி இலை:  நுண்ணிவு கைவரப் பெறும்.

14. மாதுளை இலை:  பெரும் புகழும் நற்பெயரும் கிடைக்கும்.

15. தேவதாரு இலை:  எதையும் தாங்கும் மனோதைரியம் கிடைக்கும்.

16. மருக்கொழுந்து இலை:  இல்லற சுகம் கிடைக்கப் பெறும்.

17. அரசம் இலை:  உயர் பதவியும், பதவியால் கீர்த்தியும் கிடைக்கும்.

18. ஜாதிமல்லி இலை:  சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம் கிடைக்கப் பெறும்.

19. தாழம் இலை:  செல்வச் செழிப்புக் கிடைக்கப் பெறும்.

20. அகத்தி இலை:  கடன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும்.

21. தவனம் ஜகர்ப்பூரஸ இலை:  நல்ல கணவன்- மனைவி அமையப் பெறும்.

Related

புதிய செய்திகள் 1921268826492823139

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item