கோயில்கள்

இன்றைய ராசிபலன் 25.09.2016

மேஷம் சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். ...

மேஷம்
சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்
ரிஷபம்
இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். நம்பிக்கைக்குரியவர்கள் சிலர் உதவுவார்கள். வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்
மிதுனம்
மதியம் 1.15 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் வருந்துவீர்கள். குடும்பத்தாரின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை
 கடகம்
கணவன்&மனைவிக்குள் மனம் விட்டு பேசுவது நல்லது. பழைய கடன் பிரச்னை அவ்வப்போது மனசை வாட்டும். சகோதர வகையில் பிணக்குகள் வரும். யாருக்கும் சாட்சி கையப்பமிட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களிடம் கனிவாகப் பேசுங்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். மதியம் 1.15 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே
சிம்மம்
குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். சொந்த&பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்
கன்னி
திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
துலாம்
உங்கள் செயலில் வேகம் கூடும். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்
விருச்சிகம்
இன்றும் மதியம் 1.15 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களால் அன்புத் தொல்லைகள் உண்டு. உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்
தனுசு
கணவன்&மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வாகனத்தை சரி செய்வீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். வியாபாரத்தில் லாபம் வரும். மதியம் 1.15 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படப் பாருங்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு
மகரம்
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் ரெட்டிப்ப லாபம் உண்டு. அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை
கும்பம்
புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். அக்கம்&பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். நட்பால் ஆதாயம் உண்டு. புதுப் பொருள் சேரும். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா
மீனம்
நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் ஏற்படும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்

Related

புதிய செய்திகள் 8418819858866651974

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item