கோயில்கள்

இன்றைய ராசிபலன் 26.09.2016

மேஷம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். திடீர் பயணங்கள் உண்டு. மகளுக்கு நல்ல வரன் ...

மேஷம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். திடீர் பயணங்கள் உண்டு. மகளுக்கு நல்ல வரன் அமையும்.வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். உழைப்பால் உயரும் நாள்.  
ரிஷபம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். அரசால் ஆதாயம் உண்டு.
விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.  

மிதுனம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த காரியத் தடைகள் நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.  

கடகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். நண்பர்கள், உறவினர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.   

சிம்மம்: சின்ன சின்ன வேலைகளையும் அலைந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் மற்றவர்களை விமர்சிக்க வேண்டாம். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

கன்னி: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். இனிமையான நாள். 

துலாம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன் பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். சாதித்துக் காட்டும் நாள்.

விருச்சிகம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். பணவரவு திருப்தி தரும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.   

தனுசு: சந்திராஷ்டமம் தொடர்வதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்குவீர்கள். தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

மகரம்: சவாலாகத் தெரிந்த சில வேலைகள் சாதாரணமாக முடியும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். திறமைகள் வெளிப்படும் நாள். 

கும்பம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

மீனம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புது நட்பு மலரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.

Related

படங்கள் 5920473414594923441

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item