கோயில்கள்

வில்வ இலையால் அர்ச்சனை

ஒரு சமயம் சிவபெருமானும்,பார்வதியும்கைலாயத்தில் வில்வ மரத்தடியில்வீற்றிருந்தார். அப்போது அந்த மரத்தின் மீது அமர்ந்திருந்த ஒரு குரங்கு வில்...


ஒரு சமயம் சிவபெருமானும்,பார்வதியும்கைலாயத்தில் வில்வ மரத்தடியில்வீற்றிருந்தார். அப்போது அந்த மரத்தின் மீது அமர்ந்திருந்த ஒரு குரங்கு வில்வ இலைகளை பறித்து சிவன், பார்வதி மீது போட்டுக்கொண்டிருந்தது. அன்றைய தினம் ஓர் சிவராத்திரி.இதனால் சினம் கொண்ட பார்வதி குரங்கை தண்டிக்க எண்ணினார். ஆனால் சிவபெருமானோ பார்வதியை தடுத்து அந்த குரங்கின் செய்கையை நீ அர்ச்சனையாக ஏற்றுக்கொள் என கூறினார். இதை கேட்ட் அந்த குரங்கு கீழே இறங்கிவந்து பகவானிடம் மன்னிப்பு கேட்டது. சிவபெருமானோ நான் உன் செயலை அர்ச்சனையாக எடுத்துக் கொண்டேன் எனக்கூறினார். நீ செய்த செயல் எந்த உள்நோக்கத்துடனும் செய்யவில்லை. அதோடு சிவராத்திரி தினத்தில் என்னை வில்வ இலையால் அர்சனை செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இனி என்னை வில்வ இலையால் அர்ச்சனை செய்பவர்களின் பாவத்தை போக்கி, நல்குணங்களை அருளுவேன் என கூறினார். 

அதோடு, அந்த குரங்கை பார்த்து நீ அடுத்த பிறவியில் கருவூர் சோழர் குலத்தில் மாந்ததா என்ற சோழ மன்னனுக்கு மகனாய் பிறந்து பெரிய அரசனாவாய் என வரம் அளித்தார். அதன்படி சோழ மன்னனுக்கு குலத்தில் முசுந்தன் என்ற பெயரில் அரசன் ஆனான்.

அதை கேட்ட அந்த குரங்கு நான் அரசனானாலும் என்னை இந்த குரங்கு முகத்துடன் பிறக்க அருளவேண்டும் அதோடு உம் திருவடியை என்றும் மறவாதவனாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Related

புதிய செய்திகள் 6387904189171658335

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item