கோயில்கள்

புதன் விலகினால் வளமுடன் வாழலாம்...

மருத்துவாசுரன் என்ற அசுரன், தேவர்களுக்கு மிகுந்த துன்பத்தை தந்து வந்தான். அவர்கள் தங்களின் தொழிலைச் செய்யவிடாமல் கொடுமைகள் புரிந்தான். இத...

மருத்துவாசுரன் என்ற அசுரன், தேவர்களுக்கு மிகுந்த துன்பத்தை தந்து வந்தான். அவர்கள் தங்களின் தொழிலைச் செய்யவிடாமல் கொடுமைகள் புரிந்தான். இதில் கிடுகிடுத்துப் போன தேவர்கள் மாற்று உருவில் இந்த திருவெண்காட்டில் வாழ்ந்து வந்தனர். இங்கும் வந்து அசுரன் தொல்லை கொடுக்கவே, சிவனிடம் முறையிட்டனர். சிவனும் இடபதேவரை அனுப்ப, அவர் அசுரனை போரில் வென்றார்.
ஆனால், மீண்டும் மருத்துவாசுரன் தவம் செய்து, சிவனிடமே சூலாயுதம் பெற்று தேவர்களைத் துன்புறுத்தத் துவங்கினான். இதையடுத்து வெகுண்டெழுந்த சிவபெருமான், அகோரமூர்த்தியாக மாறி நிற்க, அவரிடம் சரணடைந்த மருத்துவாசுரன், அவரின் காலுக்கு கீழிருக்கும் அனுக்கிரகம் பெற்றான். தேவர்களைக் காக்க அகோரமூர்த்தியாக மாறி மருத்துவாசுரனிடமிருந்து காப்பாற்றியது போல, நம் வாழ்வில் ஏற்படும் இன்னல்கள், தொழிலில் ஏற்படும் இடைஞ்சல்களை போக்குவார் இறைவன் என்பது மக்களின் நம்பிக்கை.

புதிதாக தொழில் தொடங்குகிறவர்கள் இங்கு வந்து வேண்டிச் சென்றால், அவர்களுடைய தொழில் ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடி வெற்றி தரும் என்பது ஐதீகம்! சிவனும் புதனும் சேர்ந்து அருள் புரியும் ஒப்பற்ற திருத்தலம் இது. அவர்களுடன் பிரம்ம வித்யாம்பிகையும் சேர்ந்து இன்னல்கள் அனைத்தையும் போக்கி சகல வளங்களும் தந்து தழைத்தோங்கச் செய்கிறாள்!

இந்த அருமையான, புராதனப் பெருமை கொண்ட திருத்தலம் திருவெண்காடு. புதன் கிரக தோஷத்தில் இருந்து நீங்கி, வளமுடன் வாழ்வதற்கும் தொழிலில் சிறந்து விளங்குவதற்கும் திருவெண்காடு திருத்தலத்துக்கு வந்து ஒரேயோரு முறை வணங்கினால் போதும் என்கின்றனர் பக்தர்கள்!

திருவெண்காடு. அல்லல்களை நீக்கி அத்தனை சந்தோஷங்களையும் தரும் அற்புத க்ஷேத்திரம். நாகை மாவட்டம் சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் வழியில், 12-வது கிலோமீட்டரிலும், மயிலாடுதுறை & பூம்புகார் வழியில் 15-வது கிலோ மீட்டரிலும் உள்ளது திருவெண்காடு. சீர்காழியில் இருந்தும் மயிலாடுதுறையில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

போட்டிகளும் பொறாமைகளும் நிறைந்த இந்த அவசர உலகில், தொழில் சிறக்கவும் குடும்பத்தில் அமைதி நிலவவும் வாழ்வில் ஒருமுறையேனும் இங்கு வந்து, புதன் பகவானைத் தரிசியுங்கள். பிரச்னைகளைக் காணடிப்பார். எதையும் சமாளிக்கும் திறமையை உங்களுக்குத் தருவார் புதன் பகவான். அதுமட்டுமல்ல... தொழில், அறிவு, நிம்மதி, மகிழ்ச்சி என அனைத்தையும் வழங்கி அருள்வார்!

தொழில் தொடங்கத் தேவையான கல்வி, அறிவு, பேச்சுத் திறமை, மொழிப் புலமை ஆகிய அனைத்தையும் தரு கிறவராக இங்கு இருக்கும் புதன் பகவான் விளங்குவதால், தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து தரிசித்து தொழிலில் மேன்மை அடைந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் நவக்கிரகங்களில் புதன் பகவானை வணங்குவதற்கான மிகச் சிறந்த பரிகாரத் தலமாகத் திகழ்கிறது திருவெண்காடு!

இங்கே ஸ்வேதாரண்யேஸ்வரர் என்ற பெயரில் சிவபெருமான் கோயில் கொண்டிருக்கிறார். 'வித்யாகாரகன்' என்ற பெயரோடு தானும் அதே கோயிலில் அமர்ந்திருக்கிறார் புதன் பகவான். காவிரியின் வடகரையில் அமைந்து உள்ள சிவத் தலங்களில் 11வது திருத்தலம்.

சிவபெருமான், அம்பாள் இருவருமே மும்மூன்று மூர்த்தியாகவும் சக்தியாகவும் அருளாட்சி நடத்தும் அற்புதமான தலம் இது. ஸ்வேதாரண்யர், அகோரமூர்த்தி, நடராஜர் என மூன்று மூர்த்தியாக சிவபெருமானும், பிரம்ம வித்யாம்பிகை, ஸ்ரீகாளி, ஸ்ரீதுர்கை என்று மூன்று சக்தியாக அம்பாளும் காட்சி தருகிறார்கள். அவர்களைப் போலவே இங்கு தீர்த்தங்களும் மூன்று, ஸ்தல விருட்சமும் மூன்று.

ஜாதகத்தில் புதன் கிரகமானது, சற்று பலவீனமாக இருப்பவர்கள் ஒருமுறையேனும் இங்கு வந்து தரிசித்துப் பிரார்த்தித்தால் போதும்... வளமுடனும் நலமுடனும் வாழலாம்!

Related

புதிய செய்திகள் 3093558594231042458

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item