கோயில்கள்

செல்வம் நிலைக்க வீட்டில்…

நீங்கள் என்ன தான் கஷ்டப்பட்டு உழைத்தாலும், அதற்கான பலன் கிடைப்பதில்லையா? வீட்டில் சந்தோஷமே இருப்பதில்லையா? அப்படியெனில், நீங்கள் உங்கள்...


நீங்கள் என்ன தான் கஷ்டப்பட்டு உழைத்தாலும், அதற்கான பலன் கிடைப்பதில்லையா? வீட்டில் சந்தோஷமே இருப்பதில்லையா? அப்படியெனில், நீங்கள் உங்கள் வீட்டில் வைத்திருக்கக்கூடாத சிலவற்றை வைத்துள்ளீர்கள் என்று அர்த்தம். வீட்டில் செல்வம் பெருகுவதற்கான சில வாஸ்து இங்கு வீட்டில் செல்வம் மற்றும் சந்தோஷம் நிலைத்திருக்க வைத்திருக்கக் கூடாதவைகள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் வீட்டில் அவை இருந்தால், உடனே அவற்றை வீட்டில் இருந்து அப்புறப்படுத்துங்கள். சரி, இப்போது அவை என்னவென்று பார்ப்போம். வறுமை நீங்கி செல்வம் கொழிக்க, வீட்டில் இருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டியவைகள்.

துளசி செடி துளசி ஓர் புனிதமான செடி. இது வீட்டில் அமைதியையும், செல்வத்தையும் ஈர்க்கும் செடி. ஆனால் அந்த துளசி செடி வீட்டின் தெற்கு மூலையில் இருந்தால், அதனால் மிகுந்த கஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்பது தெரியுமா? ஆகவே, வீட்டின் தெற்கு மூலையில் இருந்தால், உடனே அதை மாற்றுங்கள். காலணி அலமாரி காலணி அலமாரியை வீட்டின் உள்ளே வைக்காதீர்கள். மாறாக, அதனை வீட்டின் வெளியே வையுங்கள். இல்லையெனில், அது வீட்டினுள் நல்ல சக்தியை நுழைய விடாமல் செய்யும். பாலை திறந்தே வைக்காதீர்கள் வீட்டில் பாலை எப்போதும் திறந்தே வைத்திருக்காதீர்கள். பால் மட்டுமின்றி, பால் பொருட்களையும் திறந்து வைக்காமல், மூடி வைத்திருக்கவும். குப்பையை குவித்து வைக்காதீர்கள் குப்பையை மற்றும் தேவையில்லாத பொருட்களை வீட்டில் ஒரு மூலையில் குவித்து வைத்திருக்காதீர்கள். அவ்வப்போது அதனை வெளியேற்றிவிடுங்கள். காய்ந்த பூக்கள் வீட்டின் பூஜை அறையில் கடவுள்களுக்கு படைத்த பூக்களை தினந்தோறும் மாற்றுங்கள். காய்ந்த மலர்களை வீட்டில் வைத்திருந்தால், அதனால் வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் பரவும். முட்கள் நிறைந்த செடிகள் வீட்டினுள் முட்கள் நிறைந்த செடிகளை அழகுக்காக என்று கூட வைக்கக்கூடாது. இல்லாவிட்டால், வறுமை அதிகரிப்பதோடு, வீட்டில் உள்ளோரின் உடல் நலமும் பாதிக்கப்படக்கூடும். ஆகவே அம்மாதிரியான செடிகளை உடனே அகற்றிவிடுங்கள். அரசமரம் அரசமரத்தில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் இருப்பது அனைவருக்கும் தெரியும். அதே சமயம் அந்த மரம் தான் தீய சக்திகளின் வீடும் கூட. வீட்டில் இந்த அரச மரத்தை வளர்த்து வந்தால், அதனால் வீட்டில் உள்ளோர் எப்போதும் அச்சத்துடனும், மிகுந்த டென்சனோடும் இருக்கக்கூடும்.

Related

புதிய செய்திகள் 4775793014805995802

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item