கோயில்கள்

மகாவிஷ்ணு விரதம்

புரட்டாசிசனிக்கிழமைகளில் பெருமாளை விரதமிருந்து வழிபட்டால் எல்லாவிதமானகஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது நம்பிக்கை.பொதுவாக தி...

புரட்டாசிசனிக்கிழமைகளில் பெருமாளை விரதமிருந்து வழிபட்டால் எல்லாவிதமானகஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது நம்பிக்கை.பொதுவாக திருமாலைசனிக்கிழமையில் வழிபடுவது சிறப்பு. அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை விரதமிருந்து வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது நம்பிக்கை.

ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் கிரகத்திற்கு உரிய மாதங்களில் புரட்டாசியும் ஒன்று. புதனின் அதி தேவதையாகவும், பிரத்யதி தேவதையாகவும் இருப்பவர் மஹாவிஷ்ணு. ஆகவே விஷ்ணுவின் அருள்பெற உகந்த மாதமாக புரட்டாசி மாதம் திகழ்கிறது. 
புரட்டாசி மாதத்தை எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காத்தல் கடவுளான விஷ்ணுவை வணங்குதல் வேண்டும். 

ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் கடைப்பிடிப்பது நல்லது. அப்படி விரதத்தினை மேற்கொள்ள முடியாதவர்கள், புரட்டாசி சனிக்கிழமைகளில் அவரவர் குடும்ப வழக்கப்படி விளக்கு ஏற்றி, பெருமாளுக்குப் பூஜை செய்து வழிபட்டு, முடிந்த அளவு அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் அருள் கிடைக்கும்.

Related

புதிய செய்திகள் 5828889599357619000

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item