கோயில்கள்

ஓம் மந்திரத்தின் மகிமை

ஓம் எனும் பிரணவ மந்திரத்தை எவர் ஜபிக்கிறார்களோஅவர்கள்நவக்கிரகங்களின்கதிர்வீச்சுகளால் அதிகம் பாதிக்கப்படுவதில்லை.நெருக்கடி காலத்தில் வளை...


ஓம் எனும் பிரணவ மந்திரத்தை எவர் ஜபிக்கிறார்களோஅவர்கள்நவக்கிரகங்களின்கதிர்வீச்சுகளால் அதிகம் பாதிக்கப்படுவதில்லை.நெருக்கடி காலத்தில் வளைந்து கொடுத்து பின் நிமிர்ந்துகொள்கின்றனர்.ஓம்' எனும் மந்திரத்திற்குள் சிருஷ்டி கர்த்தாவான பிரம்மாவும்,, காக்கும் கடவுளான விஷ்ணுவும், சம்ஹார மூர்த்தியாகிய ருத்திரனும் (ஈசன்) அடக்கம். ஓம் எனும் மந்திரம் ஜபிப்பதன் மூலம் உடலையும் உள்ளத்தையும் சீராக வைத்துக்கொள்ள முடியும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

தொடர்ந்து ஜபித்து வருவதால், கோரிக்கைகள் நிறைவேறும்.எதிர்ப்பு சக்திகள் நீங்கும். மன சாந்தி ஏற்படும்.உலகத்தோடு ஒட்டி வாழலாம். வயது முதிர்ந்தோர் இந்த ஏகாட்சரத்தால் ஏகாந்த நிலையை அடையலாம் என்கிறார்கள்.வாய்விட்டு ஜபிக்காமல் மனதிற்குள் ஓம், ஓம், ஓம் என ஜபிக்க வேண்டும். ஓ. . . ம் என நீட்டியும் மனதால் ஜபிக்கலாம்.கிழக்குப் பார்க்க அமர்ந்து கண்களை மூடி ஜபிப்பது நன்று.

மலை மேல் இருந்து ஜபித்தால் பல மடங்கு சக்தி கிடைக்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். எந்த மந்திரம் ஜபிக்க ஆரம்பித்தாலும், குறைந்தது ஒரு லட்சம் உரு ஏற்றியபின் தான் பலன் கிடைக்க ஆரம்பிக்கும். உங்கள் உடலின் மின்சக்தி மற்றும் காந்த சக்தி ஏற்படும்.

தீராத நோயால் அவதிப்பட்டவர்களுக்காக, அவர்களுக்கு முன்னே அமர்ந்து, ஜபித்தால் அவர்களின் நோய் நீங்கும். வேப்பங்குச்சியால் குழந்தைகள் நாக்கில் ஓம் என எழுத அவர்கள் கல்வி மேம்படும்.

சுத்தமான பசுஞ்சாண விபூதியில் ஓம் என எழுதிக்கொடுக்க வயிற்று நோய்கள் நீங்கும்.இளநீரில் ஓதிக்கொடுக்க உடல் சூடு தணியும். பிறரை ஆசிர்வாதிக்கும்போது ஓம் எனும் மின்சக்தி தான், நம் கைகளில் இருந்து வெளியே பாய்கிறது.பிறருக்குண்டான குறைகள் நீங்குவது உறுதி!

வாகனம் ஓட்டும்போதும், தெருவில் நடக்கும்போதும் எந்த மந்திரமும் ஜபிக்கக் கூடாது. மீறி ஜபித்தால், உடல் தள்ளாடி விபத்து உண்டாகலாம். மூச்சை உள்ளே இழுக்கும் போது "ஓம்" "ஓம்" "ஓம்" என ஜபிக்கலாம். அப்படி ஜபிக்கும்போது மூச்சை உள்ளே இழுப்பதும்,வெளியே விடுவதும் ஒரே சீராக இருக்க வேண்டும். ஊசியில் மருந்தை ஏற்றிய பின் இறக்குவது மாதிரி அமைய வேண்டும்.எக்காரணம் கொண்டும் மூச்சை அடக்கக் கூடாது.அதாவது கும்பகம் செய்யக்கூடாது என்பது முக்கியம்! 

Related

புதிய செய்திகள் 4010202440898805838

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item