கோயில்கள்

சிதம்பரம்

சிதம்பரத்தில் இறைவன் உருவமாகவும்,அருவமாகவும், அருவுருவமாகவும் அருள்பாலிக்கிறார். உருவம் நடராஜர், அருவுருவம் ஸ்படிக லிங்கம், அருவம் சிதம்பர ...

சிதம்பரத்தில் இறைவன் உருவமாகவும்,அருவமாகவும், அருவுருவமாகவும் அருள்பாலிக்கிறார். உருவம் நடராஜர், அருவுருவம் ஸ்படிக லிங்கம், அருவம் சிதம்பர ரகசியம். சிற்சபையில் சபாநாயகரின் வலப்பக்கத்தில் உள்ளது ஒரு சிறு வாசல். இதில் உள்ள திரை அகற்றப்பட்டு ஆரத்தி காட்டப் பெறும்.
இதனுள்ளே திருவுருவம் ஏதும் தோன்றாது. தங்கத்தால் ஆன வில்வ தள மாலை ஒன்று தொங்கவிடப்பட்டுக் காட்சியளிக்கும். மூர்த்தி இல்லாமலேயே வில்வதளம் தொங்கும். இதன் ரகசியம் இறைவன் இங்கு ஆகாய உருவில் (அருவமாக) இருக்கிறார் என்பதுதான்.

அகன்ற பெருவெளியில் நிறைந்திருக்கும் இறைவனை உருவில் வழிபடுவதைவிட, வெறும் வெளியை (அருவத்தையே) இறைவனாக வழிபடுவதே சிதம்பர ரகசியமாகும். சிதம்பர ரகசிய ஸ்தானத்தில் அம்மனுக்குரிய ஸ்ரீசக்கரத்தையும், சிவனுக்குரிய சிவசக்கரத்தையும் இணைத்து, ஒன்றாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக ஒரு தகவல் உண்டு. இந்த சக்கரத்தில் நடராஜப்பெருமான் ஐக்கியமாகி, தன் ஆனந்த நடனத்தினால் உலகை படைத்து, காத்து, மறைத்து, அழித்து அருளிக்கொண்டிருக்கிறார்.

Related

புதிய செய்திகள் 6107990775361507719

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item