கோயில்கள்

அர்க்க புஷ்பம்

அர்க்க புஷ்பம் என சமஸ்கிருதத்தில் அழைக்கப்படும் எருக்கம் பூ விநாயகரை அர்ச்சிக்க உகந்த மலர்.எருக்கன் செடிகளில் பல வகைகள் உண்டு. எருக்கம் பூ ...

அர்க்க புஷ்பம் என சமஸ்கிருதத்தில் அழைக்கப்படும் எருக்கம் பூ விநாயகரை அர்ச்சிக்க உகந்த மலர்.எருக்கன் செடிகளில் பல வகைகள் உண்டு. எருக்கம் பூ செடிகள் அனைத்தின் பாகங்களும் ஏதேனும் மருத்துவ பயன்பாடு நிச்சயம் உள்ளது. மருத்துவ பயன்கள் மட்டுமின்றி இறை வழிபாட்டிற்கும் சிறந்த மலராக எருக்கன் பூ திகழ்கின்றது. “தெய்வீக மூலிகை” பெருமையுடன் விளங்கும் எருக்க பூவில் ஒன்பது வகைகள் உள்ளனவாம். அதில் நமது கண்ணில் அதிகம் படுபவை கத்தரிபூ நிற எருக்கம் செடிதான். அதற்கடுத்து பிரபலமான வெள்ளெருக்கு எனப்படும் வெள்ளை நிற பூ மலரும் எருக்கஞ் செடி, இவையிரண்டும் அதிகமாக பயன்படுகிறது.

விநாயகர் வழிபாட்டில் இவ்விரண்டு எருக்கம் பூவும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. வெள்ளெருக்கம் பூவை சிவனுக்கு அர்ச்சனை செய்ய பயன்படுத்துகின்றனர். காலையில் வெள்ளெருக்கம் பூவை கொண்டு பூஜை செய்தால் நல்ல பலனை பெறலாம்.

“அர்க்க புஷ்பம்” என சமஸ்கிருதத்தில் அழைக்கப்படும் எருக்கம் பூ விநாயகரை அர்ச்சிக்க உகந்த மலர். சூரியனுக்கு “அர்க்கன்” என்று பெயருண்டு. சூரியனுக்கு உகந்த எருக்கம் பூவை விநாயகருக்கு அணிவித்து வணங்கும்போது விக்னங்கள் நீங்குவதுடன் சூரியனின் அருளால் ஆத்ம பலமும், ஆரோக்கியமும் உண்டாகும்.

அனைவரும் எனிதாய் வணங்கும் விநாயகரை சாதாரணமாய் பூத்து கிடக்கும் எருக்கம் மலரில் வழிபட்டாலோ அனைத்து அருளும் வழங்குவார். 

Related

புதிய செய்திகள் 8311130760664026789

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item