கோயில்கள்

சங்கு வழிபாடு

சிவாலயங்களில் நடைபெறும் சங்காபிஷேகத்தினை தரிசிப்பது சிறப்பாகும்.ஒவ்வொரு கோயிலின் வசதிக்கு ஏற்ப 108 அல்லது 1008 சங்குகளில் புனித நீரினை சி...

சிவாலயங்களில் நடைபெறும் சங்காபிஷேகத்தினை தரிசிப்பது சிறப்பாகும்.ஒவ்வொரு கோயிலின் வசதிக்கு ஏற்ப 108 அல்லது 1008 சங்குகளில் புனித நீரினை சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வார்கள். இதனை தரிசிப்பதால் பேறுகள் பல பெற்று வளமுடன் வாழலாம்.
கார்த்திகை மாதத்தில் பௌர்ணமியுடன் கூடிய கிருத்திகை நட்சத்திரம் கூடும் வேளையில் இறைவன் அக்னிப் பிழம்பாகத் திகழ்கிறார். ஆதலால் சோமவார சங்காபிஷேகம், ஆராதனை நடைபெறுவதாகச் சொல்வார்கள்.
திருவண்ணாமலை, திருக்கடையூர், திருவானைக்கா, குற்றாலம் மற்றும் பல திருத்தலங்களில் சங்காபிஷேகம் நடைபெறுகிறது. சங்குகளில் சிறந்ததாகச் சொல்லப்படுவது வலம்புரி சங்கு. இந்த வலம்புரி சங்கினால்தான் சுவாமிக்கு அபிஷேகம் செய்வார்கள். தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் கிடைப்பதற்காக பாற்கடலைக் கடைந்தபோது சில அரிய பொருட்கள் தோன்றின. அவற்றில் வலம்புரி சங்கும் ஒன்று. இதனை லட்சுமியின் அம்சம் என்பார்கள்; பூஜைக்குரியதாகும். லட்சம் சங்குகளில் ஒன்றுதான் வலம்புரிச் சங்காக அமையும். இடம்புரிச் சங்கைவிட ஆயிரம் மடங்கு உயர்ந்தது வலம்புரிச் சங்கு. வலம்புரிச் சங்கு சுபகாரியங்களுக்கு மட்டும் பயன்படும். ஆனால் இடம்புரிச் சங்கு அனைத்துக் காரியங்களுக்கும் பயன்படுகிறது. அதனால் தான், ஆலயங்களில் வலம்புரிச்சங்கைப் பயன்படுத்துகிறார்கள். சில ஆலயங்களில் பூஜை முடிந்ததும் வலம்புரிச் சங்கினை ஏலம் விடுவார்கள். அதை வாங்கி இல்லத்தில் பூஜை அறையில் வைத்து வழிபட்டால் சுபிட்சம் ஏற்படும்.
சங்கு பூஜை செய்ய விரும்புகிறவர்கள், வலம்புரிச் சங்கில் நீர் நிரப்பி வைத்து, மலர்களால் அர்ச்சித்து, காயத்ரி மந்திரம் ஜபித்து, காயத்ரி தேவியின் படம் அல்லது சிற்பத்துக்கு அருகே வைத்து விடவேண்டும். பிறகு காலையில் எழுந்தவுடன், காலைக்கடன்களை முடித்துவிட்டு, நீராடியபின், பூஜை அறையில் சங்கில் உள்ள நீரினை முதலில் வீட்டின் வாசற்படி மேல் தெளிக்கவேண்டும். இப்படிச் செய்வதால் லட்சுமியானவள் நிரந்தரமாக இல்லத்தில் தங்கியிருப்பாள். மேலும், வெள்ளிக்கிழமைகளில் பசும்பால், துளசி இலைகளைப் போட்டு வைத்து பூஜை செய்ய வேண்டும். இதனை அடுத்தநாள், காலையில் எழுந்ததும் நீராடிவிட்டு, பூஜை முறைகளைச் செய்துவிட்டு, சங்கில் உள்ள பசும்பால், துளசி இலைகளை பிரசாதமாகச் சாப்பிட, நாள்பட்ட நோய்கள் குணமாகும்.
வலம்புரிச் சங்கை முறைப்படி இல்லத்தில் வைத்து பூஜித்து வந்தால் செல்வச் செழிப்பு ஏற்படும். பில்லி சூன்யம், திருஷ்டி, தீயசக்திகள் எதுவும் அண்டாது.
பகவான் கிருஷ்ணன் பாஞ்ச ஜன்யம் என்ற சங்கையும் அர்ஜுனன் தேவதத்தம் என்ற சங்கையும் பீமன் பௌண்ட்ரம் என்ற சங்கையும் போர்க்களத்தில் முழங்கியிருக்கிறார்கள். தர்மர், அனந்தவிஜயம் என்ற சங்கையும் நகுல  சகாதேவர்கள் ஸுகோஷம், மணிபுஷ்பகம் என்ற சங்குகளையும் முழங்கியதாக பாரதப்போர் வரலாறு தெரிவிக்கிறது. இதற்கு எதிராக கௌரவர்களும் தத்தம் சங்கை முழங்கியுள்ளனர்.
சங்கும் சக்கரமும் ஏந்தியுள்ள துர்க்கையை விஷ்ணு துர்க்கை என்கிறோம். இதேபோல் சில தலங்களில் சங்கு சக்கரம் ஏந்திய அனுமன்

Related

புதிய செய்திகள் 138056883912963264

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item