கோயில்கள்

சரஸ்வதி முன்பள்ளியின் முன்றலில் இப்படியா..?

யாழ்ப்பாணத்தின் கோப்பாய் சந்திக்கும் - கைதடிச் சந்திக்கும் இடையில் அமைந்துள்ள கைதடி மேற்கு ஜே - 293 கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள சரஸ்வத...

யாழ்ப்பாணத்தின் கோப்பாய் சந்திக்கும் - கைதடிச் சந்திக்கும் இடையில் அமைந்துள்ள கைதடி மேற்கு ஜே - 293 கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள சரஸ்வதி சனசமூக நிலையம் யாழ்ப்பாணத்துக்கே முன்மாதிரியாக விளங்குகிறது. 
சிறப்பாக இயங்கி வரும் சரஸ்வதி சனசமூக நிலையத்தின் கீழ் சரஸ்வதி முன்பள்ளி, சரஸ்வதி கலை அரங்கம் என்பன  அமைந்துள்ளன. 
சரஸ்வதி முன்பள்ளியின் முன்றலில் 'அமர்ந்திருக்கும் அழகிய திருவள்ளுவர் சிலை' நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 
நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையின் அழகு நிச்சயம் பார்ப்போரை பிரமிக்க வைக்கும். 
யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிற்பியொருவரே குறித்த சிலையை அழகாக செதுக்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது. 
உள்ளூரில் இருக்கும் கைதடி மக்களுக்கு புலம்பெயர்ந்து வாழும் உறவுகளும் உதவிக்கரம் நீட்டி இப்படியான சிறப்பான செயல்களை முன்னெடுத்து வருவது பாராட்டுக்கு உரியது. 
அருள்மிகு வைரவர் தேவஸ்தான ஆலய சூழலில் இவை அமைந்திருப்பது தெய்வீக சூழலை இன்னும் அழகாக்குகிறது. 
யாழ்ப்பாணத்தில் வேறு பல கிராமங்களிலும் புலம்பெயர் உறவுகளின் உதவிகளால் பல்வேறு மக்கள் நலச் செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 


Related

படங்கள் 3963343385826887938

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item