கோயில்கள்

மார்க்கண்டேயர்

மார்க்கண்டேயர் என்றும் 16 வயதில் வாழும் வரம் பெற்று இன்றும் வாழ்ந்து வருகிறார்மார்க்கண்டேயர் தன் தாய் தந்தையரோடு தங்கிருந்த இடம் திருக்கடைய...

மார்க்கண்டேயர் என்றும் 16 வயதில் வாழும் வரம் பெற்று இன்றும் வாழ்ந்து வருகிறார்மார்க்கண்டேயர் தன் தாய் தந்தையரோடு தங்கிருந்த இடம் திருக்கடையூர் அருகே தென்மேற்கு திசையில் உள்ள மணல்மேடு கிராமம், அங்கே தான் மார்க்கண்டேயர் தவச்சாலை இருந்த இடத்தில் ஆலயம் உள்ளது. அங்கு மார்க்கண்டேயரின் உருவ சிலை உள்ளது. சுவாமி பெயர் ஸ்ரீமிருகண்டீசுவரர் எனவும் அம்பாள் பெயர் மருத்துவதி எனவும் வழங்கப்படுகிறது. 

சிவபெருமான் எமனை சம்ஹாரம் செய்த பிறகு மார்க்கண்டேயர் என்றும் 16 வயதில் வாழும் வரம் பெற்று இன்றும் வாழ்ந்து வருகிறார். அவர் ஒவ்வொரு ஊர்களுக்கு சென்று அங்கே உள்ள சிவன், பெருமாள் கோவில்களில் சென்று வழிபாடு செய்து, பெருமாள் பிறந்த ஸ்தலமான ஸ்ரீ வைகுண்டத்திற்கு சென்றார். அந்த காலத்தில் பஸ் வசதிகளும், மாட்டு வண்டி வசதிகளும் இல்லை. நடைபயணமாக சென்றார். 

போகும் வழியில் கும்பகோணம் உப்பிலியப்பன் திருக்கோவிலில் துளசி மேடையில் ஒரு பெண் குழந்தை அழுவதை கண்டு நெஞ்சம் பதறிய மார்க்கண்டேயர் அந்த குழந்தையை தூக்கி அழுகையை நிறுத்தி யார் குழந்தை என்று தெரியாமல் தவித்தார். 

மார்க்கண்டேயருக்கு திருமனம் ஆகவில்லை என்றாலும் அந்த பெண் குழந்தையை தத்து எடுத்து துளசி தேவி என பெயரிட்டு வளர்த்து வந்தார். நாட்கள் கடந்து வந்தது. ஒரு நாள் சிவபக்தன் ஒருவன் மார்க்கண்டேயர் இருக்கும் இடம் தேடி வந்து நான் ஒன்று கேட்கிறேன் தருவீர்களா? என கேட்டான். அவர் என்னிடம் என்ன இருக்கிறது. கேளுங்கள் தருகிறேன் என கூற, உங்கள் பெண்ணை எனக்கு திருமணம் செய்துதரவேண்டும் என்று கூறினார். இந்த கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத அவர் என் பெண் இன்னும் அதற்கான தகுதி பெறவில்லை என கூறினார். தகுதி இல்லையென்றாலும் பரவாயில்லை. அவளை எனக்கு திருமணம் செய்து கொடுங்கள் என அவன் கூறினான். வாக்கு கொடுத்துவிட்டேன் என்ன செய்வது என்று தெரியாமல் கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என்பதால் அவருடைய பெண் துளசிதேவியை புனித நீரை ஊற்றி திருமணம் செய்துவைத்தார். 

அந்த நேரத்தில் பெண்லெட்சுமி தேவியாகவும், சிவபக்தன் பெருமாளுமாக காட்சி தந்தனர். உப்பிலியப்பன் கோவிலில் மார்கண்டேயருக்கு ஒரு சன்னதியும் உள்ளது. கேரளா மாநிலம் திருகடவூர் என்னும் இடத்திலும் அவருக்கு கோவில் உள்ளது. எனவே மார்க்கண்டேயர் எங்கேயும் ஐக்கியம்மாகவில்லை. அவர் என்றும் 16 வயசுடன் நம்முடன் வாழ்ந்து வருகிறார்.மார்க்கண்டேயருக்காக காலசம்காரமூர்த்தி செய்தார். அப்போது எமனின் உடல் விழுந்த இடம் கரியகுளம் என்று அழைக்கப்படுகிறது. எமனின் தலைவிழுந்த இடம் தெற்கு மடவளாகத்தில் உள்ளது. அந்த இடத்தை மண்டகுளம் என்று அழைக்கின்றனர்.

Related

வாழ்க்கை 6322719925172306459

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item