கோயில்கள்

பௌர்ணமி விரதங்கள்

இந்து சமயத்திலும், அதன் பிரிவுகளான சைவ வைணவ சமயங்களிலும் பௌர்ணமி பெரிய நிகழ்வாக கொண்டாடப்படுகிறது. சில தமிழ் மாதங்களுக்கான பவுர்ணமி நாளின் ...

இந்து சமயத்திலும், அதன் பிரிவுகளான சைவ வைணவ சமயங்களிலும் பௌர்ணமி பெரிய நிகழ்வாக கொண்டாடப்படுகிறது. சில தமிழ் மாதங்களுக்கான பவுர்ணமி நாளின் சிறப்புகளும் விரதங்களும் இங்கு பட்டியல் இடப்பட்டுள்ளன.

சித்ரா பவுர்ணமி - சித்ரகுப்தனின் பிறந்தநாள்.
வைகாசி பவுர்ணமி - முருகனின் பிறந்தநாள்.
ஆனிப் பவுர்ணமி - இறைவனுக்கு கனிகளை படைக்கும்நாள்.
ஆடிப் பவுர்ணமி - திருமால் வழிபாடு
ஆவணிப் பவுர்ணமி - ஓணம், ரக்சாபந்தனம்
புரட்டாசி பவுர்ணமி - உமாமகேசுவர பூசை
ஐப்பசி பவுர்ணமி - சிவபெருமானுக்கு அன்னாபிசேகம்
கார்த்திகைப் பவுர்ணமி - திருமால், பிரம்மா ஆகியோர் சிவபெருமானின் அடிமுடி காண முயன்ற நிகழ்வு
மார்கழிப் பவுர்ணமி - சிவபெருமான் நடராஜராக ஆனந்ததாண்டவம் ஆடிய நாள்
தைப் பவுர்ணமி - சிவபெருமானுக்கு பெருவிழா நடத்தும் நாள்
மாசிப் பவுர்ணமி - பிரம்மனின் படைப்பு தொழில் துவங்கிய நாள்
பங்குனிப் பவுர்ணமி - சிவபெருமான் உமையம்மை திருமண நாள்

திதிகள் எனப்படும் சந்திர நாட்களுள் பூரணையும் ஒன்று. இந்துக்களால் பூரணை சிறந்த தினமாகக் கொள்ளப்படுகிறது. அம்பிகை வழிபாடு பூரணை தினங்களில் முக்கியத்துவம் பெறுகின்றது. சித்திரை மாதத்தில் வரும் பூரணை சித்திராபௌர்ணமி என அழைக்கப்படும். தாயை இழந்தவர்கள் இத்தினத்தில் விரதமிருந்து தான தருமம் செய்வது முக்கியமானதாக விளங்குகின்றது.

மனிதர்களின் பாவ புண்ணியங்களைக் கணக்கெடுத்து யமதர்மனிடம் கொடுக்கும் பணியைச் செய்யும் சித்திரகுப்தர் அவதரித்த தினம் சித்திராபௌர்ணமி ஆகும். இத்தினத்தில் அவரை வழிபடுவதும் முக்கியமானதாக விளங்குகின்றது. அறியாமையால் மனிதர்கள் செய்யும் தவறுகள் சித்திரா பௌர்ணமி விரதத்தினால் நீங்குகின்றன என்பது நம்பிக்கை.

Related

வாழ்க்கை 3113206812036348674

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item