கோயில்கள்

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி கொடியேற்றம்

அன்னதானக் கந்தன் எனப் பக்தர்களால் போற்றிப் புகழப்படும் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ். தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த ...

அன்னதானக் கந்தன் எனப் பக்தர்களால் போற்றிப் புகழப்படும் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ். தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று வியாழக்கிழமை பிற்பகல்-3.10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.தொடர்ந்து 15 தினங்கள் சிறப்பாக நடைபெறவுள்ள இவ்வாலய மஹோற்சவத்தில் எதிர்வரும்-10ம் திகதி சனிக்கிழமை காலை-07.30 மணிக்குப் பூங்காவனத் திருவிழாவும், 11ம் திகதி காலை-07 மணிக்குக் கைலாச வாகனமும், 14ம் திகதி புதன்கிழமை மாலை சப்பறத் திருவிழாவும், 15ம் திகதி வியாழக்கிழமை காலை-07மணிக்குத் தேர்த் திருவிழாவும், மறுநாள் 16ம் திகதி வெள்ளிக்கிழமை தீர்த்தத் திருவிழாவும், அன்றைய தினம் மாலை- 5 மணிக்கு மெளனத் திருவிழாவும் இடம்பெறவுள்ளது.


Related

புதிய செய்திகள் 1822295074841603687

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item