கோயில்கள்

புண்ணியம் நிறைந்த மஹாளய பித்ருபக்ஷ காலம்

வருகிற 17ம் தேதி முதல் 30ம் தேதி வரை புரட்டாசி மகாளய பட்ச புண்ணிய காலம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். இந்த நாளில், முன்னோர்களுக்கான த...

வருகிற 17ம் தேதி முதல் 30ம் தேதி வரை புரட்டாசி மகாளய பட்ச புண்ணிய காலம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். இந்த நாளில், முன்னோர்களுக்கான தர்ப்பண காரியங்களைச் செய்வது மிகுந்த புண்ணியங்களையும் பலன்களையும் தரும் என்கிறார்கள்.

நம் இந்த வாழ்க்கைக்கும் வாழ்க்கை உயர்வதற்கும் உதவி செய்துள்ள, பேரன்பு காட்டி வளர்த்து உள்ள இறந்த தாய், தந்தை, தாத்தா, பாட்டி, மாமா, மாமி, அத்தை முதலான அனைவருக்கும் நன்றி செலுத்துவதற்கான நமக்குக் கிடைக்கும் வாய்ப்பை அளிக்கும் மஹாளய பக்ஷம் எனும் புண்யகாலம்!மஹாளயம் என்றால் மஹான்களின் இருப்பிடம், பெரியவர்கள் கூடும் இடம் என்று அர்த்தம். பக்ஷம் என்றால் 15 நாட்கள், இறந்து போன நம் முன்னோர், இந்த மஹாளய பக்ஷம் 15 நாட்களும் பூமிக்கு வந்து நம்முடன் தங்குவதாகத் தெரிவிக்கிறது சாஸ்திரம் என்கிறார் சென்னை நங்கநல்லூர் பாலாஜி வாத்தியார்.

அதனால்தான் இந்த 15 நாட்களிலும் பித்ருக்களுக்கு நாம் அன்னமளிக்க வேண்டுமே தவிர, மற்ற விசேஷமான பூஜைகளையோ, ஹோமங்களையோ செய்யகூடாது என்றும் அறிவுறுத்துகிறது சாஸ்திரம்.மஹாளயத்தை பார்வணம், ஹிரண்யம், தர்ப்பணம் என்று மூன்று வழிகளில் செய்யலாம். பார்வணம் என்பது ஆறு அந்தணர்களை பித்ருக்களாக வரித்து, தந்தை, தாய், தாத்தா, பாட்டி முதலியவர்களுக்கு ஹோமம் செய்து, அந்தணர்களுக்கு அதாவது ஆச்சார்யர்களுக்கு உணவிடவேண்டும்!

ஹிரண்யம் என்பது அரிசி, வாழைக்காய் முதலானவற்றை ஆச்சார்யருக்கு வழங்கி, தர்ப்பணம் செய்யவேண்டும்.
தர்ப்பணம் என்பது தானாகவே அமாவாசை தர்ப்பணம் போல் செய்யவேண்டும்.இவற்றில் ஏதாவது ஒருவிதத்தில் கட்டாயம் தனது பித்ருக்களுக்குச் செய்து கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறது சாஸ்திரம். இந்த நாட்களில், ஏதேனும் ஒருநாள் மட்டும் மஹாளயம் செய்பவர்கள்

மஹாபரணி, மஹாவ்யதீபாதம், மத்யாஷ்டமி, கஜச்சாயா ,ஆகிய நாட்களில் ஏதாவது ஒரு நாளில் மஹாளயம் செய்யலாம். இவை மிகச் சிறந்த நாட்கள் எனப்படுகிறது.

18/09/16 ஞாயிறு & த்விதியை
19/09/16 திங்கள் & திருதியை
20/09/16 செவ்வாய் & சதுர்த்தி, மஹாபரணி
21/09/16 புதன் & பஞ்சமி,சஷ்டி(2திதிகள்)
22/09/16 வியாழன் & சப்தமி
23/09/16 வெள்ளி & மத்யாஷ்டமி,வியதிபாதம்
24/09/16 சனி & நவமி
25/09/16 ஞாயிறு & தசமி
26/09/16 திங்கள் & ஏகாதசி
27/09/16 செவ்வாய் & துவாதசி, சன்யஸ்த மஹாளயம்
28/09/16 புதன் & திரயோதசி
29/09/16 வியாழன் & சதுர்த்தசி
30/09/16 வெள்ளி & சர்வஅமாவாசை
01/10/16 சனி & ப்ரதமை
முன்னோரை வணங்குவோம். அவர்கள். நம்மையும் நம் சந்ததியையும் சீரும் சிறப்புமாக வாழவைப்பார்கள்!

Related

புதிய செய்திகள் 7878509645496787760

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item