கோயில்கள்

அமாவாசையில் தர்ப்பணம் செய்ய வேண்டுமா?

நம் முன்னோர்களுக்கு எந்த நாட்களில் தர்ப்பணம் செய்ய வேண்டும் .பெற்றோர்கள் வாழும் காலத்தில், அவர்களுக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்வத...


நம் முன்னோர்களுக்கு எந்த நாட்களில் தர்ப்பணம் செய்ய வேண்டும் .பெற்றோர்கள் வாழும் காலத்தில், அவர்களுக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்வது எவ்வளவு அவசியமோ, அதுபோல அவர்களின் வாழ்க்கைக்குப்பிறகும் இந்த நன்றிக்கடனைத் தொடரவேண்டும் என்கிறது சாஸ்திரம். அதற்காக தர்ப்பணம், பிதுர்காரியம், முன்னோர் கடன் என்று பல பெயர்களில் இதைக் குறிப்பிடுவர். நன்றியுணர்வோடு, அவர்கள் மறைந்த மாதத்தின் திதியன்று மறக்காமல் கவனமுடன் செய்தல் அவசியம் என்பதால் இதனை ‘சிரார்த்தம் என்றும் சொல்வார்கள். 

தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் வரும் அமாவாசையிலாவது தர்ப்பணம் செய்வது அவசியம். சிலர் தை, ஆடி அமாவாசைகளில் மட்டும் கொடுக்கிறார்கள். 

ஒருவேளை, இதுவரை பிதுர் தர்ப்பணமே செய்யாமல் இருந்தால், மகாளாய அமாவாசையன்று அதைத் தொடங்கினால் மிகவும் சிறப்பு. இந்த தருணத்தில் தான் நமது முன்னோர் ஒட்டு மொத்தமாக பூமிக்கு வருவதாக ஐதீகம். தர்ப்பணத்தின் போது எள், ஜலம், பிண்டம், அரிசி, வாழைக்காய், சாப்பாடு ஆகியவற்றை பயன்படுத்துவர். 

இவற்றை பிதுர் தேவதைகள் முன்னோர்களுக்குக் கொண்டு சேர்த்துவிடுவர் என்கிறது சாஸ்திரம். பூலோகத்திற்கு தங்கள் பிள்ளைகளை பார்க்க வந்த முன்னோர் மீண்டும் பிதுர்லோகத்திற்கு திரும்புவதாக ஐதீகம். 

Related

புதிய செய்திகள் 7816543935285153447

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item