கோயில்கள்

பித்ருக்கள் ---திருத்தலங்கள்

மகாளய பட்சத்தின் 15 நாட்களில், பித்ரு தர்ப்பணம் செய்தால், அந்த தர்ப்பணத்தை பித்ருக்கள் நேரடியாக ஏற்றுக்கொள்வார்கள் என்கிறது சாஸ்திரம்.மகா...


மகாளய பட்சத்தின் 15 நாட்களில், பித்ரு தர்ப்பணம் செய்தால், அந்த தர்ப்பணத்தை பித்ருக்கள் நேரடியாக ஏற்றுக்கொள்வார்கள் என்கிறது சாஸ்திரம்.மகாளய பட்ச காலத்தில் எல்லா நாட்களிலும் தர்ப்பணம் செய்ய இயலாதவர்கள், வயதானவர்கள் மகாபரணியிலும் அமாவசையன்றும் செய்தால் கூட போதும். முழுப்பலன்களைப் பெறுவார்கள் என வலியுறுத்துகிறார்கள் ஆச்சார்யர்கள்.

ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை ஆகிய நாட்களில் பிதுர்களுக்குச் செய்யும் தர்ப்பணம் மற்றும் தானங்கள் நம் அனைத்து தோஷங்களையும் நீக்கும்.மிகக்கடுமையான பிதுர் தோஷம் உடையவர்கள், பலகாலமாக பித்ரு ஆராதனைகளைச் செய்யாத பாவத்துக்கு ஆளானவர்கள் ராமேஸ்வரம் புண்ணியத் தலத்துக்குச் சென்று திலா ஹோமம் செய்வது மிகவும் அவசியம். இந்த திலா ஹோமம் வேதம் அறிந்த ஆச்சார்யர்களால்தான் செய்ய வேண்டும் என்பது முக்கியம்!

திலா ஹோமம் எனப்படுவது நெல்லையும் எள்ளையும் கலந்து செய்யப்படும் ஹோமம். திலம் என்றால் எள் என்று அர்த்தம்.
திலா ஹோமம் செய்பவர்கள் அன்று இரவு ராமேஸ்வரத்தில் தங்கிச் செல்வது மேலும் பல நன்மைகளையும் சத்விஷயங்களையும் பெற்றுத் தரும்!
திலா ஹோமம் முடிந்து பிண்டங்களை கடல் நீரில் கரைக்கும் போது கருடபகவான் அங்கு வட்டமிடுவார் என்பது ஐதீகம். இதனால், மகாவிஷ்ணுவின் பேரருளைப் பெறுவது உறுதி!
வைஷ்ணவ சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்கள் ராமேஸ்வரம் அருகில் உள்ள திருப்புல்லாணிக்கரையில் திலாஹோமம் செய்து பித்ருக்களின் ஆசிர்வாதம் பெறலாம்.


திருவாரூர் அருகில் உள்ள திலதர்ப்பணபுரி எனும் புண்ணிய திருத்தலத்தில், பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்வது மிகுந்த பலன்களைத் தரவல்லது!
சென்னையில் மயிலாப்பூர் குளக்கரை, சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயில் குளக்கரை, கடற்கரைப் பகுதிகளில் தர்ப்பணம் செய்யலாம்.
ஆகவே, மகாளயபட்ச புண்ணிய காலத்தில், முன்னோரை ஆராதிப்போம். பித்ரு சாபம் நீங்கப் பெறுவோம்.

Related

புதிய செய்திகள் 769507104919934861

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item