கோயில்கள்

மாயை உணர்ந்த நாரதர்

தெய்வீக சக்தி வாய்ந்த, தாண்ட முடியாத ஆற்றல் பெற்றது மாயை. பகவானாகிய என்னை யார்சரணடைகிறார்களோ,அவர்களே இந்த மாயையைத்தாண்டுகிறார்கள்ஸ்ரீகிரு...


தெய்வீக சக்தி வாய்ந்த, தாண்ட முடியாத ஆற்றல் பெற்றது மாயை. பகவானாகிய என்னை யார்சரணடைகிறார்களோ,அவர்களே இந்த மாயையைத்தாண்டுகிறார்கள்ஸ்ரீகிருஷ்ணர்.தெய்வீக சக்தி வாய்ந்த, தாண்ட முடியாத ஆற்றல் பெற்றது மாயை. பகவானாகிய என்னை யார் சரணடைகிறார்களோ, அவர்களே இந்த மாயையைத் தாண்டுகிறார்கள்- ஸ்ரீகிருஷ்ணர்.

நாரத முனிவர், சிவபெருமானை சந்தித்தார். அப்போது, ‘இறைவா! மிகவும் சக்தி வாய்ந்த மாயை எப்படிப்பட்டது?.. அதைக் காணவும், அறியவும் நான் விரும்புகிறேன்’ என்றார் நாரதர்.‘நாரதா! அதற்கான நேரம் வரும்போது, மாயையின் தோற்றத்தை உனக்குக் காட்டுகிறேன்’ என்றார் சிவபெருமான்.சில நாட்கள் கழிந்தன. ஒரு நாள் சிவபெருமான், நாரதரை அழைத்துக்கொண்டு பூலோகத்தில் ஒரு பாலைவனத்தின் வழியாகப் பயணித்தார். இருவரும் நீண்ட நேரம் நடந்து சென்றனர். எனவே இறைவனுக்கு நாக்கு வறண்டு தாகம் ஏற்பட்டது. சோர்ந்து போய் அப்படியே அமர்ந்து விட்டார்.

இறைவனைக் கண்ட நாரதருக்கு வருத்தம் மேலிட்டது. ஈசன் நாரதரிடம், ‘நாரதா! மேற்கொண்டு நான் நடக்க வேண்டுமானால், என் தாகம் தணிக்க தண்ணீர் வேண்டும். சீக்கிரம் சென்று தண்ணீர் கொண்டு வா!’ என்றார்.நாரதர் தண்ணீர் தேடிப் புறப்பட்டார். நீண்ட தூரம் நடந்தும், பல இடங்களில் தேடியும் ஒரு நீர்நிலை கூட தென்படவில்ல. இருப்பினும் இறைவனின் சோர்வை எண்ணியவாறு, மேலும் நீண்ட தூரம் பயணித்தார். அப்போது ஓரிடத்தில் ஆறு தென்பட்டது.

அந்த ஆற்றின் கரையில் அழகு தேவதையாக ஒரு பெண் அமர்ந்திருந்தாள். அந்தப் பெண்ணின் அழகால் ஈர்க்கப்பட்ட நாரதர், அவள் மீது காதல் கொண்டார். தன்னை நெருங்கி வந்த நாரதரைக் கண்ட அந்தப் பெண்ணும், அவரிடம் மையல் கொண்டாள். இருவரும் நீண்ட நேரம் காதல் மொழி பேசிக்கொண்டனர். பின்னர் அந்தப் பெண்ணை, நாரதர் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு பல குழந்தைகள் பிறந்தன. நாரதர், தன் மனைவி மக்களுடன் இன்பமாக வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் அந்த நாட்டில் திடீரென கொள்ளை நோய் ஏற்பட்டது. நோய் தாக்குதலால் பலர் மரணமடைந்தனர். கொள்ளை நோயைக் கண்டு பயந்த நாரதர், தம் மனைவி, மக்களைக் காப்பாற்ற எண்ணி, வேறு நாட்டுக்குச் செல்ல முடிவு செய்தார். மனைவியும் அதற்கு சம்மதம் தெரிவித்தாள். நாரதர் தனது மனைவி, மக்களுடன் புறப்பட்டார். வழியில் ஒரு ஆற்றுப்பாலம் இருந்தது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகமாக இருந்ததால், அந்த பாலம் இடிந்து விழுந்ததில், நாரதரும், அவரது மனைவி, மக்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

குடும்பம் முழுவதும் வெள்ளத்தில் பலியாக, நாரதர் மட்டும் உயிருடன் கரை ஒதுங்கினார். ஆற்றங் கரையில் அமர்ந்தபடி தன் மனைவி, மக்களை நினைத்து, கண்ணீர் விட்டு கதறி அழுது கொண்டிருந்தார்.அந்த நேரத்தில் அவர் முன்பாக வந்து நின்றார் சிவபெருமான். ‘என்ன நாரதா! என்னை மறந்து விட்டாயா?. என்னுடைய தாகத்தை தணிக்க உன்னிடம் தண்ணீர் கேட்டேன். தண்ணீர் எங்கே?. சரி.. நீ எதற்காக இங்கே உட்கார்ந்து அழுது கொண்டிருக்கிறாய்?’ என்றார் ஒன்றும் அறியாதவர் போல.

இறைவனைக் கண்டதும் மனித வாழ்வில் இருந்து விடுபட்டு தெளிவு பெற்ற நாரதர், தன்னுடைய நிலையை உணர்ந்தார். ‘இறைவா! மாயையை அறிந்து கொள்ள வேண்டும் என்று நான் கேட்டதற்கு, தாங்கள் தந்த பாடம் மிக நன்றாக இருக்கிறது.. உங்களுக்கும், உங்கள் மாயைக்கும் எனது பெரிய வணக்கம்..’ என்று ஒரு பெரிய கும்பிடு போட்டார் நாரதர்.

மனித வாழ்வு மாயை நிறைந்தது. அதில் மூழ்கிக் கிடப்பவர்களே அதிகம். இறைவனின் திருவடியைப் பற்றிக்கொண்டவர்கள் மட்டுமே, மாயையில் இருந்து மீள்கிறார்கள். மற்றவர்கள் முதலில் இன்பமாகத் தெரியும் மாயையின் பிடியில் சிக்கி, துன்பக் கடலில் தத்தளிக்கிறார்கள். 

Related

புதிய செய்திகள் 7491088116379448724

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item