கோயில்கள்

தெட்சிணாமூர்த்தி

திருவொற்றியூர்தியாகராஜர் வடிவுடையம்மன் கோயில் வாசலுக்கு முன்புள்ள பக்க மண்டபத்தில் வடக்கு நோக்கி 9 அடி உயரம், 5 அடி அகலம் கொண்ட பிரமாண்ட ...

திருவொற்றியூர்தியாகராஜர் வடிவுடையம்மன் கோயில் வாசலுக்கு முன்புள்ள பக்க மண்டபத்தில் வடக்கு நோக்கி 9 அடி உயரம், 5 அடி அகலம் கொண்ட பிரமாண்ட வடிவத்தில் அருள்பாலிக்கிறார்.அரக்கோணத்துக்கு 16 கி.மீ. தொலைவிலிருக்கும் தக்கோலம் திருத்தலத்தில் இருக்கும் சாந்த தட்சிணாமூர்த்தி வலக்காலை தொங்கவிட்டுக்கொண்டும், இடக்காலை மேலே வைத்துக்கொண்டு உத்கடி ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார்.

பெரும்பாலும் சிவாலயங்களில் மட்டுமே இருக்கும் தட்சிணாமூர்த்தி, கல்லிடைக்குறிச்சி - மன்னார்கோயிலில் உள்ள வேதநாராயணர் கோயில் விமானத்திலும், மதுரை சோழவந்தானிலுள்ள பெருமாள் கோயிலிலும் அருள்பாலிக்கிறார்.நாகலாபுரம் வேதநாராயணர் கோயில், திருப்பூந்துருத்தி, நஞ்சன்கூடு, காஞ்சிபுரம் கைலாசநாதர், தூத்துக்குடி கழுகாசலமூர்த்தி கோயில்களில் வீணாதர தட்சிணாமூர்த்தியைத் தரிசிக்கலாம்.

தஞ்சை பாபநாசம் அருகிலுள்ள நல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் இரட்டை தட்சிணாமூர்த்தியைத் தரிசிக்கலாம்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வடதிசையில் உள்ள ஆத்மநாதசுவாமி கோயிலில் தட்சிணாமூர்த்தி யோகநிலையில் அருள்பாலிக்கிறார்.

ஆந்திரா அனந்தப்பூர் மாவட்டத்திலுள்ள ஹேமாவதியில் ஐயப்பன் போல் ஆசனமிட்டு, யோக மூர்த்தியாகத் திருக்காட்சி தருகிறார். கேரளா மாநிலம் சுகபுரத்தில், தட்சிணாமூர்த்திக்கென்றே தனி ஆலயம் அமைந்துள்ளது. ஆதிசங்கரர் தட்சிணாமூர்த்தி அஷ்டகத்தை இயற்றியது இங்குதானாம்.

Related

புதிய செய்திகள் 4095692470734530474

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item