கோயில்கள்

உண்டியலில் பணம் போடுவது...

எல்லாமே இறைவனால் தான் தரப்படுகிறது என்கிறார்கள்.அப்படியிருக்க, அந்த பொருளை செலவழித்துஇறைவனுக்கு எதற்காக நைவேத்யம் படைக்க வேண்டும்? ஏன் உண...

எல்லாமே இறைவனால் தான் தரப்படுகிறது என்கிறார்கள்.அப்படியிருக்க, அந்த பொருளை செலவழித்துஇறைவனுக்கு எதற்காக நைவேத்யம் படைக்க வேண்டும்? ஏன் உண்டியலில் பணம் போட வேண்டும்? என சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். இதற்கான விளக்கத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
ஒரு தாய் குழந்தைக்கு சோறூட்டும் போது, அது சிரித்துக் கொண்டோ, விளையாடிக்கொண்டோ, அடம் பிடித்து அழுது கொண்டோ சாப்பிடுகிறது. திடீரென சோற்றை கையில் எடுத்து, தனக்கு ஊட்டும் தாயின் வாயில் கொடுக்கிறது. அம்மா அந்த பிஞ்சுக்கரங்கள் தரும் சோற்றை அமுதமென வாங்கி சாப்பிடுகிறாள். இதுபோல் தான் இறைவனுக்கு நாம் அளிக்கும் உணவும். அவன் நமக்கு அன்போடு தந்ததை, அவனது பிள்ளைகளான நாமும் அன்புடன் திரும்ப அளிக்கிறோம். அதை அவன் தாய் போல் ஏற்றுக் கொள்கிறான். 'அவன் தந்ததை அவனுக்கே அர்ப்பணம் செய்தல்' என்ற தத்துவமும் இதில் இருக்கிறது. இந்த உண்மையை புரிந்து கொண்டு இறைவன் கொடுத்ததில், ஒரு பகுதியையாவது அவனுக்காக செலவிடலாம்.

Related

புதிய செய்திகள் 7137873894519040509

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item