கோயில்கள்

இன்றைய ராசிபலன் 04.10.2016

மேஷம் பல முகாந்திரங்களிலும் பண வரவு கூடும். எடுத்த காரியங்கள் எல்லாம் கை கூடும். அரசாங்கத்தால் ஆதாயம் கிடைக்கும். காதல் வசப்பட்டுக் களி...

மேஷம்
பல முகாந்திரங்களிலும் பண வரவு கூடும். எடுத்த காரியங்கள் எல்லாம் கை கூடும். அரசாங்கத்தால் ஆதாயம் கிடைக்கும். காதல் வசப்பட்டுக் களிப்பு எய்துவர். புதிய தொழில் முயற்சிகள் ஈடேறும்.

ரிஷபம்

எல்லா வளமும் பெறும் இனிய நாள். உல்லாசப் பயணங்களால் உள்ளம் மகிழும். புதுப்பெண்கள் சிநேகமும், தனக்கெனத் தனிவீடும் அமையும். குடும்பத்தில் சுபகாரியங்கள் குதுகலமாய் நிறைவேறும். எதிரிகள் பணிவர்.

மிதுனம்

எதிலும் ஆராய்ந்து இறங்கவேண்டிய நாள். சிரத்தையற்ற செயலால் திறமை இருந்தும் நல்ல பெயர் கிடைக்காது. தொழில் ஆர்வம் கூடுவதால், ஆதாயம் பெருகும். சிலருக்குத் தேவையற்ற கவலைகள் எழும்
.
கன்னி

கல்வியில் வெற்றிபெற கடின உழைப்புத் தேவை. கௌரவக் குறைவு ஏற்படாவண்ணம் பார்த்துக்கொள்வது சிறப்பு. மனைவி, மக்களின் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை தேவை.

மகரம்

தன்னம்பிக்கை, தைரியம் எல்லாம் ஓங்கும் நாள். அனைத்து செயல்பாடுகளும் அனுகூலமாய் அமையும். திருப்திகரமான தீர்த்த யாத்திரைகள் மகிழ்வு தரும். வேண்டுதல்கள் நிறைவேறும்.

கடகம்

வீட்டில் நிம்மதியற்ற நிலை உருவாகும். வாகன சுகம் குறையும். எந்தக் காரியத்தைச் செய்ய முயன்றாலும் தடைகள், தாமதங்கள் ஏற்படும். தன இழப்புகளால் தாக்கம் குறையும்.

சிம்மம்

அன்பு சகோதரர்களால் அதிக உதவி உண்டு. எடுத்த காரியங்கள் யாவற்றிலும் எளிதில் வெற்றி கிடைக்கும். புதிய நண்பர்களைப் பெறுவீர்கள். மனைவியின் உதவி பெற்று மகிழ்வீர்கள். தன்னம்பிக்கை கூடும்.

துலாம்

குடும்ப சுகத்தில் திருப்தி ஏற்படும். புத்தாடை அணிகலன்கள் ஆகியவற்றை அணிவார். பெரியோர்பால் நேசம் ஏற்படும்.தொழில் வளம் பெருகும். எதையும் துணிச்சலோடு எதிர் கொள்வீர்கள்.
மீனம்

வழக்குகளில் வாய்தா வாங்கிக் கொள்வது நல்லது. மனைவியின் மனம் அறிந்து செயல்பட்டால் கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்கலாம். எந்தச் செயலையும் அவசரமின்றி நிதானமாகச் செய்தால் வெற்றி நிச்சியம்.

தனுசு


பெண்களால் தனலாபம் அடைவீர்கள். பிறருக்கு விருந்து உபசாரம் செய்து மகிழ்வீர்கள். பிரிந்தவர் கூடிப் பேரின்பம் அடைவர். மாணவர்களுக்குக் கல்வியிலும், வியாபாரிகளுக்குத் தொழிலிலும் வெற்றி கிட்டும்.

விருச்சிகம்

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாது. எடுத்த காரியங்களில் ஆதாயம் பெற எச்சரிக்கையுடன் நடத்தல் அவசியம். தீயவழிகளில் தேவையற்ற செலவுகளைச் செய்ய வேண்டியது வரும். சிலருக்குப் பணமுடை ஏற்படலாம்.

கும்பம்

தெய்வபக்தியால் மனநிம்மதி கூடும். அன்னதானம் பொன்ற நற் காரியங்களில் ஈடுபடுவீர்கள். திருவருளாலும், குருவருளாலும் வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். மனதிற்கினிய நல்ல மனைவி அமைவாள்.

Related

புதிய செய்திகள் 4810756427670527011

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item