கோயில்கள்

இன்றைய ராசிபலன் 07.10.2016

மேஷம்: மதியம் 12.30 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் முடிந்த வரை சகிப்புத்தன்மையுடனும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடனும் நடந்துக் கொ...

மேஷம்: மதியம் 12.30 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் முடிந்த வரை சகிப்புத்தன்மையுடனும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடனும் நடந்துக் கொண்டால் நல்லது.வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலையிலிருந்து மகிழ்ச்சி தொடங்கும் நாள்.

ரிஷபம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். தாயாரின் உடல் நலம் சீராகும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப் பார்கள். மதியம் 12.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் முன்யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள்.

மிதுனம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

கடகம்: அனுபவ பூர்வமாகவும், அறிவுப் பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். அமோகமான நாள்.

சிம்மம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

கன்னி: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாருக்கு அசதி, சோர்வு வந்து நீங்கும். கலைப் பொருட்
கள் வாங்குவீர்கள். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

துலாம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

விருச்சிகம்: இன்றும் மதியம் 12.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் முன்கோபத்தை தவிர்க்கப்பாருங்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். மாலைப் பொழுதிலிருந்து தடைகள் உடைபடும் நாள்.

தனுசு: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கப்பாருங்கள். மற்றவர்கள் விஷயத்தில் அநாவசியமாக தலையிட வேண்டாம். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்துப் போகும். மதியம் 12.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.

மகரம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை சந்திக்க நேரிடும். வீட்டை விரிவுப்படுத்துவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். சிறப்பான நாள்.

கும்பம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

மீனம்: உங்கள் செயலில் வேகம் கூடும். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். சாதித்துக் காட்டும் நாள்.

Related

புதிய செய்திகள் 3451525614406822279

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item