கோயில்கள்

இன்றைய ராசிபலன் 08.10.2016

மேஷம்: அறிமுகமில்லாதவரிடம் அதிக நெருக்கம் வேண்டாம். தொழில், வியாபாரத்தில், லாபம் மிதமாக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாக நேரிடும...

மேஷம்: அறிமுகமில்லாதவரிடம் அதிக நெருக்கம் வேண்டாம். தொழில், வியாபாரத்தில், லாபம் மிதமாக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாக நேரிடும். தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவது நல்லது.

ரிஷபம்: அவப்பெயர் வராதபடி விழிப்புடன் செயல்படவும். தொழில், வியாபாரத்தில், வருமானம் ஓரளவே இருக்கும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். உடல்நிலை திருப்தியளிக்கும்.

மிதுனம்: தக்க சமயத்தில், உறவினரின் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரம் செழிக்க, ஆர்வத்துடன் பணிபுரிவீர்கள். பணவரவு அதிகரிக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். விருந்து விழாவில் பங்கேற்பீர்கள்.

கடகம்: எதிர்பார்ப்பு இனிதே நிறைவேறும். தொழில், வியாபாரத்தில், பொறுப்பு அதிகரிக்கும். சேமிக்கும் விதத்தில் வருமானம் வரும். நிலுவைப் பணமும் வசூலாகும். உறவினர் வருகையால், குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்

சிம்மம்: உடல் நலனில் அக்கறை தேவை. தொழில், வியாபாரத்தில், லாபம் சுமாரான அளவில் இருக்கும். உறவினர் ஆதரவாக நடந்து கொள்வர். பெண்கள், பணம், பொருளை இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம்.

கன்னி: மனதில் இனம்புரியாத குழப்பம் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில், ஆதாயம் மிதமாக இருக்கும். ஒவ்வாத உணவை தவிர்ப்பது நல்லது. இயந்திரப்பிரிவு பணியாளர் பாதுகாப்பில் கவனம் கொள்ளவும்.

துலாம்: பெற்றோரின் சொல்லுக்கு முக்கியத்துவம் தருவீர்கள். தொழில், வியாபாரத்தில், வளர்ச்சிப்பணி நிறைவேறும். ஆதாயம் படிப்படியாக அதிகரிக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு சிறப்பாக நடந்தேறும்.

விருச்சிகம்: நண்பரின் பேச்சால், சிரமத்தைச் சந்திக்கலாம். தொழில், வியாபாரத்தில், தாமதநிலை உருவாகலாம். லாபம் ஓரளவே இருக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். பிள்ளைகளின் செயல்பாடு ஆறுதல் அளிக்கும்.
தனுசு: அக்கம் பக்கத்தினர் அன்பு பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில், வளர்ச்சிக்கான வாய்ப்பு கிடைக்கும். சேமிக்கும் விதத்தில் ஆதாயம் வரும். வீட்டில் மராமத்துப் பணி நடந்தேறும். மனைவியின் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்கள்.

கும்பம்: இனிய அணுகுமுறையால் அனைவரையும் கவர்வீர்கள். தொழில், வியாபாரத்தில், வளர்ச்சி அதிகரிக்கும். வருமானம் பன்மடங்கு உயரும். பிள்ளைகளின் எதிர்கால வளர்ச்சிக்காகப் பாடுபடுவீர்கள்.

மகரம்: சூழ்நிலை உணர்ந்து பேசுவது நல்லது. தொழில், வியாபாரம், தாமத கதியில் இயங்கும். அளவான பணவரவு கிடைக்கும். வெளியூர் பயணத்தில், திடீர் மாறுதல் உண்டாகும். பெண்கள், ஆடம்பர எண்ணத்துடன் செயல்படுவர்.

மீனம்: மனதில் தன்னம்பிக்கை நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில், பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். அரசியல்வாதிகளுக்கு சமரசப் பேச்சில் தீர்வு கிடைக்கும்.

Related

புதிய செய்திகள் 5028844266175819178

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item