கோயில்கள்

இன்றைய ராசிபலன் 09.10.2016

மேஷம்: கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் பிறக்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள்.வர வேண்டிய பணம் கைக...

மேஷம்: கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் பிறக்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள்.வர வேண்டிய பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.  

ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் தேவையற்ற அலைச்சலுக்கு ஆட்படுவீர் கள். குடும்பத்தில் உள் ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப் படுவீர்கள். சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.

மிதுனம்: பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். ஆடை, ஆபரணம் சேரும். மனைவிவழியில் ஒத்தாசையாக இருப்பார்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. நன்மை கிட்டும் நாள்.

கடகம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். அமோகமான நாள்.

சிம்மம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். கனவு நனவாகும் நாள்.

கன்னி: தடைகளை கண்டு தளர மாட்டீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

துலாம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர் வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக் கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். நினைத்ததை முடிக்கும் நாள்.

விருச்சிகம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங் களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படு வார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

தனுசு: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.

மகரம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகும். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் ஏற்படும். போராடி வெல்லும் நாள்.

கும்பம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். தந்தைவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். புகழ், கௌரவம் கூடும் நாள். 

மீனம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர், நண்பர்கள் தேடி வந் துப் பேசுவார்கள். சிலர் உங்களை நம்பி முக் கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

Related

புதிய செய்திகள் 9126312347109038832

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item